Home> Tamil Nadu
Advertisement

நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் - ராம்கி வலியுறுத்தல்

Vijaykanth: நடிகர் சங்கம் புதிய கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என பிரபல நடிகர் ராம்கி வலியுறுத்தியுள்ளார்.  

நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் - ராம்கி வலியுறுத்தல்

தேமுதிக நிறுவனரும், தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடலநலக்குறைவால் நேற்று காலமானார். அவரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நபராக சாலிகிராமத்தில் இருக்கும் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் சக அமைச்சர்களும் சென்று விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டு அங்கு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபல நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் இரவு வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார்.

மேலும் படிக்க | மிஸ் யூ கேப்டன்! கருப்பு MGR விஜயகாந்தை போலவே சினிமாவிலும் அரசியலிலும் தடம் பதித்த நடிகர்கள்

இதனைத் தொடர்ந்து இன்று காலை தமிழ்நாடு அரசு சார்பில் தீவுத் திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் நேரடியாக வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக திரைத்துறையினர் ஏராளமானோர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரையுலகின் உட்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தீவுத்திடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு பேசிய நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகச் சிறந்த மனிதர் என்று புகழாரம் சூட்டினார். அவருடைய குணம் யாருக்கும் வராது என தெரிவித்த அவர், இந்த உலகில் வாழ்ந்தவர் கோடி என்றாலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவர்கள் சிலரில் விஜயகாந்த் பெயரும் இருக்கும் என உருக்கமாக கூறினார். இதனையடுத்து பேசிய கமல்ஹாசன், விஜயகாந்தின் கோபத்தில் நியாயம் இருக்கும், அவரின் கோபத்துக்கு நான் ரசிகன் என கூறினார். இதேபோல் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய நடிகர் ராம்கி, நடிகர் சங்கத்துக்காக அரும்பாடுபட்ட அவரின் பெயரை நடிகர் சங்க கட்டடத்துக்கு வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதேபோல், நளினி, நிஷா, நிரோஷா உள்ளிட்ட பல நடிகைகளும் கண்ணீர் மல்க விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.  

மேலும் படிக்க | விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்-செருப்பை தூக்கியடித்த மர்ம நபர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More