Home> Tamil Nadu
Advertisement

போராட்டம் கைவிட்டு கடலுக்கு சென்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்!

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று போராட்டத்தை கைவிட்டு மீன்பிடி தொழிலுக்கு சென்றனர். 

போராட்டம் கைவிட்டு கடலுக்கு சென்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்!

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று போராட்டத்தை கைவிட்டு மீன்பிடி தொழிலுக்கு சென்றனர். 

இறால் மீன்களுக்கு உரிய விலை இல்லாமல் ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் முறையில் கொள்முதல் செய்வதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு சென்று பிடித்து வந்த மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்ற காரணத்தால்,  காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். 

மேலும் மீன்களுக்கான விலையை அரசு நிர்ணயம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசு தளையீடு நிகழும் வரை வேலைநிறுத்தம் தொடரும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

அதவேளையில் தனியார் நிறுவனங்கள் போதிய ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்து நியாயமான விலைக்கு வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில் தற்போது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று போராட்டத்தை கைவிட்டு மீன்பிடி தொழிலுக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு  இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 

Read More