Home> Tamil Nadu
Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மார்ச் 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி மார்ச் 11 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மார்ச் 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் ஒருபகுதியாக தினமும் கோவிலில் அம்மன் புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்களும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். முத்துமாரியம்மன் கோவிலின் மாசி மகத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 11 ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

மேலும் படிக்க | பாஜகவின் தாமரை மலர்ந்தால் இந்த தேசம் சுடுகாடாக மாறும் - செல்வப்பெருந்தகை விளாசல்

இதையொட்டி அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 16 ஆம் தேதி சனிக்கிழமை இந்த விடுமுறைக்கான பணிநாள் எனவும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவித்துள்ளார். வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பணி நாள் எனவும் கலெக்டர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

fallbacks

அத்துடன், இந்த உள்ளுர் விடுமுறை 1881-ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், இந்த உள்ளுர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டு திறந்திருக்கும். மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும் கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Lok Sabha Election: தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More