Home> Tamil Nadu
Advertisement

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுவையில் 27-ஆம் தேதி பந்த்!

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரியில் 26-ஆம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுவையில் 27-ஆம் தேதி பந்த்!

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரியில் 26-ஆம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள நிலையில், இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள்., ‘குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரியில், வருகிற 26-ஆம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 27-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டு (NRC) தொடர்பாக நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. இருப்பினும், தற்போது ​​தேசிய அளவில் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) போன்ற முறையான எந்த முயற்சியும் தொடங்கப்படவில்லை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அரசாங்கத்தால் கூறப்படுகிறது. எனினும் வரும் காலத்தில் நிச்சையம் அனைத்து மாநிலங்களிலும் இந்த பதிவேடு செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

தேசிய அளவில் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) செயல்படுத்தும் பட்சத்தில் 1971-க்கு முன்னர் அடையாள ஆவணங்களை நாம் முன்வைத்து நமது இந்திய குடியுரிமையினை நிரூபிக்க வேண்டும். அதேப்போல் குடியுரிமை திருத்த சட்டமானது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிச் சென்று இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது. 

எனினும் மதரீதியில் இந்த நடவடிக்கை நடத்தப்படுவதாக தெரிவித்து எதிர்கட்சியினர், ஆளும் கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுவை அரசு மத்திய அரசின் முடிவுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்தினை அறிவித்துள்ளது.

Read More