Home> Tamil Nadu
Advertisement

பொங்கல் பரிசு தொகுப்பு; மண்பானையும் வழங்க வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை

பொங்கல் நாளன்று அடுப்பில் பொங்கல் பானை வைக்கப்பட்டு அதற்கு பொட்டு வைத்து, பானையை சுற்றி மஞ்சள் குலை கட்டி அதில் பொங்கல் வைப்பார்கள்.

பொங்கல் பரிசு தொகுப்பு; மண்பானையும் வழங்க வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை

தை முதல் நாளான்று தை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதை போல் உழவர் திருநாள் என்ற சிறப்பு பெயரும் உண்டு. உழவுக்கும், தொழிலுக்கும், வந்தனை செய்வோம் என்பதற்கு ஏற்ப உழவர் திருநாளை தமிழர்கள் வெகுசிறப்பாக கொண்டாடுவர். பொங்கல் நாளன்று அடுப்பில் பொங்கல் பானை வைக்கப்பட்டு அதற்கு பொட்டு வைத்து, பானையை சுற்றி மஞ்சள் குலை கட்டி அதில் பொங்கல் வைப்பார்கள்.

தை மாதம் பிறக்கும் போது பொங்கல் (Pongal 2022) பானை வைக்கப்படுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம். பொங்கல் பானை தயாரிக்கும் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் சேதுக்கு வாய்த்தான், வாழவல்லான், தென்திருப்பேரை ஆகிய இடங்களில் நான்கு தலைமுறையாக பராம்பரியத் தொழிலாக செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கும் மண் பானைகள் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் இங்கு கிடைக்கும் மண் தரமானதாக இருக்கிறது.

ALSO READ | பொங்கல் பண்டிகைக்கான குலை மஞ்சளின் அமோக விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஆற்றில் இருந்து எடுக்கபடும் களி என்ற மண்ணை எடுத்து வந்து சாலை ஓரங்களில் காயவைத்து உலர்த்தி பின்பு தேவையான நீர் சேர்த்து குழப்பி அதிலிருந்து பானை தயார் செய்கின்றனர். பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் ஆணும், பெண்ணும் இதில் ஈடுபடுகின்றனர். மண் உலர்த்த, பானை தட்ட, பானையை அடுக்க பெண்ணும், பானை உலர்த்தி, அதை பக்குவமாக தீயில் சுட்டு எடுக்கும் பணியை ஆணுமாக செய்கின்றனர். பின்பு பானைக்கு சிவப்பு சாயம் பூசி காய வைக்கின்றனர். பின்னர் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். 

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி நியாயவிலைக்கடை மூலமாக மக்களுக்கு பொங்கல் பொருட்கள் கரும்பு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது அதைப்போல ஒரு குடும்ப அட்டைக்கு 2 பொங்கல் பானை வீதம் தமிழக அரசு சார்பில் வழங்கினால் மண்பாண்ட தொழிலாளர்கள் உடைய வாழ்வு வளம் பெறும் எனவே தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலமாக ரேஷன் கார்டு பொங்கல் பானையை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொங்கல் பானை உற்பத்தி செய்து வைத்திருக்க  அரசு தொழிற்கூடம் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ | தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More