Home> Tamil Nadu
Advertisement

சென்னையில் இருந்து 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து!

சென்னையில் இருந்து 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து!

சென்னையில் இருந்து 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்களது ஊர்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 30,120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது. அதில் சென்னையில் இருந்து மட்டுமே 16,075 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. இதற்காக 17 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 1 மையமும், பூந்தமல்லியில் 1 மையமும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 12 ஆம் தேதி இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வழக்கமாக இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன் 4,950 சிறப்பு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. இது குறித்து அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 11 ஆம் தேதி இரவு மட்டும் 4,904 பேருந்துகள் மூலம் சுமார் 2,58,095 பயணிகள் வெளியூர் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் இருந்து தாம்பரம், தாம்பரம் சானிடோரியம், மாதவரம், பூந்தமல்லி, கேகே நகர், கோயம்பேடு ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Read More