Home> Tamil Nadu
Advertisement

வியாபாரியை அரை நிர்வாணமாக்கி இழுத்துச்சென்ற சென்னை போலீஸ்! வீடியோ வைரல்

கோயம்பேட்டு மார்கெட்டு அருகே சாலையோர சிறு கடை ஆக்கிரமிப்பு அகற்றும் பொழுது வியாபாரி ஒருவரை போலீசார் அரை நிர்வாணப் படுத்தி அழைத்துச்சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

வியாபாரியை அரை நிர்வாணமாக்கி இழுத்துச்சென்ற சென்னை போலீஸ்! வீடியோ வைரல்

சென்னை கோயம்பேடு பூ பழம் காய்கறி சந்தைகளை ஒட்டிய 60 அடி சாலையில் இரு புறமும் ஆக்கிரமிப்பு செய்துள்ள 500 க்கும் மேற்பட்ட சாலையோர சிறு கடைகளை காவல்துறை உதவியுடன் சிஎம்ஏ அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். 

இதற்காக சாலையோர கடை வியாபாரிகளை அடித்து இழுத்துச்செல்லும் நிகழ்வுகளும், கடையில் வியாபாரிகள் அடுக்கி வைத்துள்ள பொருட்களை குப்பை வண்டியில் ஏற்றும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோயம்பேடு ஒழுங்குமுறை விற்பனைகூட அதிகாரி CAO S.சாந்தி தலைமையிலான அதிகாரிகள் சட்ட விரோத கடைகளை அகற்றும் பணியில் இன்று ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | பிரியாணி கடையில் ரகளை - காவல் நிலையத்தில் "விருந்து" வைத்த போலீஸ்..!

அப்பொழுது, கோயம்பேடு மார்கெட் அருகில் அமைந்திருக்கும் சாலையோர கடைகளை அகற்றியும், வியாபாரிகளை அடித்து, குண்டுகட்டாக தூக்கியும் சென்றனர். 

இச்சம்பவத்தின் வீடியோ பதிவு இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவில், கணேசன் என்ற வியாபாரியைப் போலீசார் அடித்து இழுத்து செல்கின்றனர். அவரை அழைத்துச் செல்லும்போது ஏற்பட்ட இழுப்பறியில் கணேசனின் சட்டை, பேண்ட் எல்லாம் கிழிந்து அரை நிர்வாணமாக்கப்படுகிறார்.

 

 

இதற்கிடையில் கணேசனைப் போலீஸார் அடித்து இழுத்து வரும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. வலியில் மானம் போகும் தருவாயில் கணேசன் கதறுவதை சற்றும் பொருட்படுத்தாமல் போலீசார் அவரை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். 

மேலும், கடையைக் காலி செய்துவிடுகிறோம், தனது சகோதரர் கணேசனை அடிக்காதீர்கள் என்று கதறியபடி காவல்துறையிடம் கணேசனின் சகோதரி துர்கா கேட்கும் நிலையில், சகோதரி துர்காவையும் குண்டுகட்டாக போலீசார் தூக்கிச் செல்கின்றனர்.

இந்த வீடியோ பதிவைப் பார்ப்பவர்கள் போலீஸாரை சாடியும், அவர்களது அராஜகத்தைக் கண்டித்தும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரணுக்கு வெற்றி மகுடம் சூட்டியதா?- RRR விமர்சனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More