Home> Tamil Nadu
Advertisement

TTF வாசனின் தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை விரைந்த போலீசார்!

சென்னையில் இருந்து மகாராஷ்டிரா நோக்கி  பைக்கில் சென்றபோது காஞ்சிபுரத்தை அடுத்த தாமல்  பகுதியில் வீலிங் சாகசத்தின் போது TTF வாசன் பைக் விபத்து ஆனது.  

TTF வாசனின் தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை விரைந்த போலீசார்!

அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து வரும் அவர்களிடத்திலே மோகத்தை ஏற்படுத்திவரும் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். இவர் மஞ்சள் வீரன் என்கிற படத்திலே தற்போது நடித்தும் வருகிறார்.  இந்த நிலையில் TTF வாசன் சென்னையிருந்து-மகாராஷ்டிராவிற்கு தனது நண்பரான அஜித் என்பவர் உடன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற போது ஒருவரைக்கொருவர் முந்தி பைக் ரேஸில் ஈடுபட்டதும் அதிவேகமாக வாகனத்தினை இயக்கி ஸ்டண்ட் என்று சொல்லப்படக்கூடிய வீலிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார்.  மேலும் வரக்கூடிய வழிகளில் தனது ஆதரவாளர்கள் என்று சொல்லப்படக்கூடிய FOLLOWERS களை வரவழைக்கும் தொடர்ந்து தான் வரும் இடங்கள் குறித்து சமூகவளைதளங்களிலே பதிவிட்டிருக்கிறார். ஆங்காங்க இளைஞர் சிலர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குழுமியிருக்கின்றனர். அவர்களை மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் TTF வாசன் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | அரசு பள்ளிகளில் தரமற்ற சைக்கிள் வழங்கியதாக புகார்!

இந்த நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வீல்லிங் சாகசத்தில் ஈடுபட்ட TTF வாசன் பைக்கின் பின்புறமானது சாலையில் தேய்ந்து நிலைதடுமாறி பைக்கானது இரண்டு மூன்று முறை தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் TTF வாசனுக்கு படுகாயமானது ஏற்பட்டு காரப்பேட்டை அருகிலுள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவரது கைக்கு மாவுகட்டானது போடப்பட்டு கால், உடல் போன்ற உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்களுக்கு சகிச்சைகளானது அளிக்கப்பட்டது. இதனையெடுத்து தான் சென்னையில் சகிச்சை பெற்று கொள்ளவதாக கூறிய நிலையில் அவரது நண்பர்கள் அவரை அழைத்து சென்றிருக்கின்றனர்.

இந்த நிலையில் இச் சம்பவம் தொடர்பாக TTF வாசன் மீது  279 IPC மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, 338 IPC பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது என  இரண்டு பிரிவுகளின் கீழ் பாலுச்செட்டி சத்திரம்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து சிக்கும் வாசன்

சில மாதங்களுக்கு முன் டிடிஎப் வாசன் வந்த கார் ஒன்று சென்னையில் விபத்தில் சிக்கியது. சமூக வலைத்தளத்தில் பைக் ரேஸ் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமானவர், டிடிஎப் வாசன். இவருக்கு மிக பெரிய அளவில் சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கல்லூரி பருவமுடைய பல இளைஞர்கள் இவர் மீது வெறியாக இருப்பார்கள். இவரை போல பைக் ரேஸ் செய்ய வேண்டும் என நினைத்து பலர் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். அவ்வப்போது இவர் பல சர்ச்சைகளில் சிக்கி காவல் நிலையத்திற்கு சென்று வழக்கு மேல் வழக்கை வாங்கி உலா வரும் 'பிரபலமாக' மாறி இருக்கிறார். தற்போது இவர் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிக்கும் படத்திற்கு 'மஞ்சள் வீரன்' என பெயரிடப்பட்டுள்ளது. எனினும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரமோ அல்லது படத்தின் வெளியீட்டு தேதியோ வெளியாகவில்லை. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பூஜை தொடர்பான தகவல்கள் மட்டும் வெளியானது.

மேலும் படிக்க | மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த முற்போக்கு சிந்தனையாளர் தந்தை பெரியார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More