Home> Tamil Nadu
Advertisement

2019 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்கு தடை: அரசாணை வெளியீடு!

அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடைக்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 5-ம் தேதி தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக  சட்டசபையில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை என்பதை தெரிவித்தார்.

அதில், பால், தயிர், மருத்துவ பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும், இதர பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை செய்வதாகவும் மேலும் பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் கப்புகள், பாட்டீல்கள், கைப்பைகள் உள்ளிட்டவை தடை செய்வதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Read More