Home> Tamil Nadu
Advertisement

தமிழ்நாட்டை இன்றும் ஆள்வது பேரறிஞர் அண்ணாவே, பெருங்குரலோனின் பிறந்தநாள் இன்று..!

பேரறிஞர் அண்ணா எனும் பெருங்குரலோனின் 115வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.  

தமிழ்நாட்டை இன்றும் ஆள்வது பேரறிஞர் அண்ணாவே, பெருங்குரலோனின் பிறந்தநாள் இன்று..!

பேரறிஞர் அண்ணாவை புழக என்ன சொல் இட்டாலும் அது தகும் என்றாலும், பெருங்குரலோன் என்ற சொல் அவரை விட வேறு யாருக்கும் சால பொருத்தமாக இருக்காது. பேச்சு, எழுத்து என்ற ஆயுதத்தால் தமிழ் சமூகத்தை அறிவு பாதையில் வழிநடத்திய பெருமை அவரையே சாரும். பெரியாரின் கொள்கை வழி வந்து, ஆட்சி, அதிகாரத்தால் மட்டுமே நாம் நினைக்கும் காரியங்களை சாத்தியப்படுத்த முடியும், சட்டவடிவமாக்க முடியும் என்று எண்ணி, அரசியல் பாதையில் அடியெடுத்து வைத்து, அறிவாயுதம் ஏந்தி, பெருங்குரலோடு கொள்கை முழக்கமிட்டு ஒட்டுமொத்த ஒரு சமூகத்தையே அரசியல்படுத்தி அதன் மூலம் வெற்றி கண்ட ஒரு மாபெரும் தமிழ் கனல் என்றால் அது அறிஞர் அண்ணா தான். 

மேலும் படிக்க | திருமாவளவன் பின்வாங்காமல் இருக்க வேண்டும் - சீமான் பேட்டி!

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கை முழக்கத்தை வைத்த அண்ணா, தமிழ்நாட்டினர் தாய் மொழி தமிழை தவிர்த்து உலகத்தோடு பேச ஆங்கிலமே போதும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்தியா என்பது ஒரு நாடல்ல, பல பிரதேசங்கள் ஒன்றிணைந்த கூட்டமைப்பு என்பதால் அவரவர் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்திலேயே முழக்கமிட்டார். நாட்டின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டுமானால் எந்தவொரு சமூகம் மீது மொழிகளை திணிக்கக்கூடாது, குறிப்பாக தமிழ்நாடு மீது இந்தியை புகுந்த நினைக்கவே கூடாது என ஆணித்தரமாக பேசினார். அதனையும் மீறி இந்தி மொழி திணிப்பை முன்னெடுத்த மத்திய அரசுக்கு எதிராக 1965 ஆம் ஆண்டு கடுமையான மொழிப் போராட்டத்தையும் முன்னெடுத்தார்.

இதனால் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த அண்ணா தமிழ்நாட்டில் எப்போதும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே இருக்கும் என சட்டவடிவமாக்கினார். அத்துடன் தமிழ்நாடு என பெயர் வைத்த அவர், சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தார். இதுகுறித்து அண்ணா பேசும்போது, " ஓராண்டுக்கு முன்னால் ஆட்சிக்கு வந்தேன். இதில் மூன்று முக்கியமான காரியங்களை செய்திருக்கிறேன். ஒன்று, தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறோம். இரண்டாவது, சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்திருக்கிறோம், மூன்றாவது இருமொழிக் கொள்கை : தமிழ், ஆங்கிலம் மட்டும்தான் மும்மொழிக்கு இடமில்லை என அறிவித்திருக்கிறோம்.

இதனை பார்த்து பலருக்கு கோபம் வருகிறது. சிலர் எங்கள் ஆட்சியையே மாற்றவேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று எனக்குச் செய்தி வந்தது. அவர்களால் முடியுமா? என்று நான் சவால் விடமாட்டேன். இன்றைய அரசியல் அமைப்புச் சட்டப்படி, அவர்கள் நினைத்தால் முடியும். ஆனால், அப்படியே வேறு யார் வந்து உட்கார்ந்தாலும், நாங்கள் செய்த இந்த முப்பெரும் சாதனைகளை மாற்றலாம் என்று நினைத்தாலோ, அந்த நேரத்தில் அதை மாற்றினாலோ, மக்கள் நிலை என்னாகும்? தமிழ்நாடு எப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கும் என்று நினைக்கின்ற நேரத்தில், அவர்களை அறியாமல் ஒரு அச்சம் தோன்றும், அந்த அச்சம் இருக்கின்றவரையில், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்" என்று பேசினார்.

அவர் அன்று சொன்னது இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அதனால் தமிழ்நாட்டை இன்றும் அண்ணாவே ஆள்கிறார். அண்ணாவின் இந்த பெருங்குரல் தான் இன்றும் தமிழ்நாட்டை ஒரு முன்னோக்கிய சமூகமாக வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அண்ணாவின் இந்த பெருங்குரல் இன்னும் சத்தமாக ஒலித்துக் கொண்டே இருக்கும். 

மேலும் படிக்க | சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More