Home> Tamil Nadu
Advertisement

"பாஸ்ட் புட் சாப்பிட்டால் பாஸ்டாக மேலே போயிடலாம்" -ஜெயக்குமார்!

மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஆரோக்கிய பாரத பணம் என்னும் மிதிவண்டிப் பயணம் புதுச்சேரி நோக்கி சென்னையில் இன்று துவங்கியது.

மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஆரோக்கிய பாரத பணம் என்னும் மிதிவண்டிப் பயணம் புதுச்சேரி நோக்கி சென்னையில் இன்று துவங்கியது.

இந்த மிதிவண்டிப் பயணத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகளின் பாதிப்பை குறித்து பேசினார். தானியங்கள் கொண்ட உணவுகளை தொடர்ந்து வாழ்ந்தால் ஆரோக்கியமாக வாழலாம் எனவும், "பாஸ்ட் புட் சாப்பிட்டால் பாஸ்டாக மேலே போய்விடுவோம்" குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்... உணவு பாதுகாப்புத்துறை மூலம் புகார் வரும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நிச்சையம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 
மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதே அதிமுக-வின் நோக்கம். யார்  எந்த நியமனங்களைச் செய்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. 'நாற்பதும் நமதே, நாடும் நமதே' எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் நிலையில் அதிமுக சார்பில் பொறுப்பாளர்கள் எப்போது நியமிக்கப்படுவார்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, உரிய நேரத்தில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து சபரிமலை விவகாரம் தொடர்பாக ரஜினி தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு... "கழுவும் மீனில் நழுவுகிற மீனாக இருப்பவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரின் கருத்து சரியா தவறா என்பதை மக்கள் தான் தீர்மானம் செய்ய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்

Read More