Home> Tamil Nadu
Advertisement

பங்குனி உத்திரம்! தேரோட்டம், வழிபாடு! காவடி என ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்!

Panguni Uthiram : பங்குனி உத்திரத் திருநாளன்று ஆலயங்களில் சிறப்பு வழிபாடு, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்... தேரோட்டம்... 

பங்குனி உத்திரம்! தேரோட்டம், வழிபாடு! காவடி என ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திரத் திருவிழா மாலை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது-  சாமி தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி  தண்டாயுதபாணி சுவாமி விமர்சியாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரத் திருவிழா, கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. 

பங்குனி உத்திரத்தன்று முருகனுக்கு காவடி எடுப்பது விசேஷமானது. சிவன் பார்வதி, முருகன் - வள்ளி - தெய்வானை படத்தை வைத்து வழிபடுவது விசேஷமானது. பங்குனி உத்திர நாளன்று விரதம் இருப்பது சிறப்பு என்பதால், பலரும் விரதம் இருந்தும், காவடி எடுத்தும் பங்குனி உத்திர நாளை சிறப்புடன் கொண்டாடுகின்றனர். 

பங்குனி மாதம் பிறந்தாலே, தெய்வங்களின் திருமணங்கள் நடைபெறுவதால் கல்யாணம் களைகட்டிவிடும். தெய்வங்களுக்கு திருமணம் செய்து பார்க்கும் மாதமான பங்குனி பக்தர்களுக்கு சிறப்பு வாய்ந்த மாதமாகும். பங்குனி உத்திர திருவிழா திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று மாலை 6:00 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க | Guru Peyarchi: மேஷ ராசிக்கு மே மாத குரு பெயர்ச்சி பலன்கள்! பணம் புகழ் செல்வாக்கு குவியும்!

நாளை மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் நடைபெற உள்ளது. பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்திற்க்கு  வருகை தந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடிக்கு சென்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மலையடிவாரத்தில் பக்தர்கள் காவடிகளை சுமந்து அழகு குத்தியும் வந்து மேளதாளத்துடன் காவடி ஆட்டம் ஆடி திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

பக்தர்கள் வருகை காரணமாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது கோவிலுக்கு செல்லும் வழியாக குடமுழக்கு நினைவரங்கம்  வழியாக பக்தர்கள் மேலே செல்லவும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்பு படிப்பாதை வழியாக கீழே இறங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 64 கலைகளும் கூடி சந்திரன் காட்சியளிக்கும் முழுநிலவு நாள் பங்குனி உத்திரமும் திருக்கல்யாணங்களும்...

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துவருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பங்குனி உத்திர திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று கும்பகோணம் நாகேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கும்பகோணம் நகரில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது நாகேஸ்வரன் திருக்கோவில் ஆகும்.  தேவார பாடல் பதிகம் பெற்ற இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாவான பங்குனி உத்திர திருவிழா, கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .

பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. திருத்தேரில் நாகேஸ்வரர், மற்றும் பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும் படிக்க | Venus Transit: ராஜராஜ மாளவ்ய ராஜயோகம்! மீனத்தில் சுக்கிரப் பெயர்சியால் செழிக்கும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More