Home> Tamil Nadu
Advertisement

OVAM Sales: தமிழகத்தில் அதிகரித்து வரும் சட்ட விரோத கருமுட்டை விற்பனை மோசடி

Ovam Mafia in Tamil Nadu: தமிழகத்தில் அதிகரித்து வரும் சட்ட விரோத கருமுட்டை விற்பனை மோசடி; அடைக்கலமான தோழியிடம் கைவரிசை காட்டிய தம்பதிகள்

OVAM Sales: தமிழகத்தில் அதிகரித்து வரும் சட்ட விரோத கருமுட்டை விற்பனை மோசடி

சென்னை: கருமுட்டை திருட்டு மற்றும் மோசடி விவகாரங்கள் அண்மைக் காலமாக வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மற்றுமொரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குடும்ப தகராறில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணிற்கு அடைக்கலம் கொடுப்பதாக சொல்லி ஏமாற்றி, அவரிடம் இருந்து கருமுட்டையை கொடுக்குமாறு வலியுறுத்தி துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுள்ளது. இது ஈரோட்டில் நடைபெற்ற கருமுட்டை விற்பனை சம்பவத்திற்கு பிறகு வெளிவந்துள்ள மற்றொரு சம்பவம் ஆகும்.

சென்னை எர்ணாவூர் பகுதியில் வசித்து வரும் 22 வயது ஸ்ருதிக்கு திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை இருக்கிறது. கணவர் விஜயுடன் சில நாட்களாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. கணவன் மனைவி இருவரில் தகராறு முற்றிய நிலையில், ஸ்ருதி தனது கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியில் வந்துவிட்டார்.

மேலும் படிக்க | ஈரோடு சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் கருமுட்டை எடுத்தது அம்பலம்!

கணவரிடம் இருந்து விலகி வந்து நிர்கதியாக நின்ற ஸ்ருதிக்கு, அவரது தோழியான ஐஸ்வர்யா தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா, தனது கணவர் சூரஜ் என்ற ஜெனிஸ் கண்ணாவுடன் திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஒடைக்குப்பத்தில் வசித்துவருகிரார்.

ஐஸ்வர்யாவும் அவரது கணவரும், தங்கள் வீட்டில் தங்கியிருந்த ஸ்ருதியை வேலைகள் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும் வேலைக்காரியைப் போல் நடத்தி கொடுமைப் படுத்தியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. அதோடு, ஸ்ருதியின் கருமுட்டையை தருமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

அதற்கு ஸ்ருதி மறுக்கவே, தங்கள் பேச்சை கேட்குமாறு சொல்லி, துன்புறுத்தி அடித்ததாக கூறப்படுகிறது. தம்பதிகளான ஜெனிஸ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா சுருதியை அடித்து தாக்கியதாகவும், கத்தியின் பின்புறத்தால் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி

இந்நிலையில் ஜெனிஷ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா வெளியில் சென்ற நேரத்திற்காக காத்திருந்த ஸ்ருதி, சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும், வீட்டில் இருந்து தப்பித்து ஓடி வந்து தனது கணவர் விஜய்க்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் இருவரும் உடனடியாக திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு சென்று ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் ஜெனிஸ் கண்ணா மீது புகார் அளித்துள்ளார்

ஸ்ருதியும் அவரது கணவர் விஜயும் அளித்த புகாரின் அடிப்படையில், திருவொற்றியூர் காவல் துறையினர் சூரஜ் என்ற ஜெனிஸ் கண்ணா மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

கருமுட்டையை விற்றுத்தர வலியுறுத்தி திருமணமான பெண் ஒருவரை, தோழியின் குடும்பம் கொடுமை படுத்திய சம்பவம் வெளியாகி அந்த வட்டார மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | 12 வயது சிறுமியிடம் இருந்து 15 முறை கருமுட்டை திருட்டு! தந்தை உட்பட 3 பேர் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More