Home> Tamil Nadu
Advertisement

‘ஆப்ரேசன் கஞ்சா 2.O’ 45 கிலோ கஞ்சா, 1400 போதை மாத்திரை....சிக்கியது மாஃபியா கும்பல்!

சென்னை அருகே 45 கிலோ கஞ்சா, 1400 போதை மாத்திரை, சிரஞ்சி, 4 பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.  

‘ஆப்ரேசன் கஞ்சா 2.O’   45 கிலோ கஞ்சா, 1400 போதை மாத்திரை....சிக்கியது மாஃபியா கும்பல்!

தாம்பரம் காவல் ஆணையரகம் சரகத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நெடுநாட்களாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தவண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் 2.0’ என்ற பெயரில் தமிழக டிஜிபி தலைமையிலான போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி, தாழம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் நாவலூர் சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியில் அதிவேகமாக 4 இருசக்கர வாகனங்கள் வந்துள்ளன. 4 வாகனங்களையும் மடக்கிப் பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், அவர்களை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  பின்னர் நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில்தான் அடுத்தடுத்து திடுக்கிடும் சம்பவங்கள் போலீஸாருக்கு தெரியவந்தது.

மேலும் படிக்க | புதுசா புதுசா போதையை அனுபவிக்கும் இளைஞர்கள்.! மாஃபியா ‘கேங்’-ஐ கூண்டோடு பிடித்த தருமபுரி போலீஸ்

கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை கே.பிகே.நகரைச் சேர்ந்த 26-வயதான வெங்கடேசன், துரைப்பாக்கம் பர்மா பஜாரை சேர்ந்த 39-வயதான புன்னியமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகையைச் சேர்ந்த 21-வயதான சிரில், சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த 21-வயதான அஜித் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நான்கு பேரும் கூட்டாக இணைந்து கஞ்சா விற்பனை செய்வதும், போதை மாத்திரைகளை சிரஞ்சி மூலம் ஏற்றி விற்பனை செய்வதும் அதிர்ச்சித் தகவல் வெளியானது. இவர்களின் அதிக டார்கெட் கல்லூரி மாணவர்கள்தான் என விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த போதை வஸ்துக்களை எங்கிருந்து இவர்கள் கடத்துகிறார்கள் என்ற விசாரணையில் போலீஸார் இறங்கினர். ஆந்திர மாநிலத்திலிருந்து வலி நிவாரிணி மாத்திரைகளை கொரியர் மூலம் சென்னை பெருங்குடியில் உள்ள வெங்கடேசன் வீட்டிற்கு வரவழைத்து சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விற்பனை செய்து லாபம் சம்பாதித்து வந்துள்ளனர். 

மேலும் படிக்க | ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனை: தலைச்சுற்ற வைக்கும் பகீர் பின்னணி!

இதுமட்டுமல்லாமல், இந்த நான்கு பேரும் ஆந்திர மாநிலம் துணி வில்லேஜ் என்ற பகுதிக்கு சென்று பெட்ஷட் வியாபாரம் செய்வதுபோல செய்து தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். கஞ்சாவை பெட்ஷீட்டிற்குள் மறைத்து வைத்து இதுவரை கடத்திவந்ததாக நான்குபேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். கிடுப்பிடி விசாரணையில் இதுவரை அவர்களிடம் இருந்து 12.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 45 கிலோ கஞ்சா, 4.5 லட்ச ரூபாய் மதிப்புடைய 10 சவரன் தங்க நகை, 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய வலிநிவாரணி மாத்திரைகள், 100 சிரஞ்சி ற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுமட்டுமல்லாமல், கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. 

மேலும் படிக்க | வலிமை பட பாணியில் போதைபொருள் நெட்ஒர்க்கை பிடித்த சென்னை போலீஸ்!

புன்னியமூர்த்தி மீது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு, பைக் திருட்டு உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். வெங்கடேசன் மீது 10க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. சிரில் மற்றும் அஜித் ஆகியோர் மீது 4 பைக் திருட்டு மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றிய போலீஸார் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்த "ஆபரேஷன் 2.O" வில் சிறப்பாக பணியாற்றிய கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமரன், தாழம்பூர் காவல் ஆய்வாளர் வேலு, உதவி ஆய்வாளர்கள் முத்துகுமார், பார்த்திபன், தலைமை காவலர்கள் சுதர்சன், காசிமுருகன், பிரேம் ஆனந்த் உள்ளிட்டோரை தாம்பரம் காவல் ஆணையர் ரவி வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

 

Read More