Home> Tamil Nadu
Advertisement

தமிழகத்தில் கோவில்களை திறக்க வேண்டும் - அண்ணாமலை

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் கோவில்களை திறக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்

தமிழகத்தில் கோவில்களை திறக்க வேண்டும் - அண்ணாமலை

தமிழக பாஜக சார்பில் நமோ பொங்கல் விழா கோவையில் கொண்டாடப்பட்டது. பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவினை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இளம் பெண்கள் பலர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். 

ALSO READ | பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார் - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை?

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தை காட்டிலும் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் சில மாநிலங்களில், அம்மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து கோவில்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். ஆனால், தமிழகத்தின் முக்கிய திருவிழாவான தைப்பூசத் திருவிழாவுக்கு கோவில்கள் மூடப்பட்டிருப்பதாக தெரிவித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மக்கள் மீது நம்பிக்கை இல்லாமல் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியிருப்பதாக குற்றம்சாட்டினார். 

ALSO READ | கவர்னர்களை பா.ஜனதா ஒற்றர்களாக பயன்படுத்துகிறது - முத்தரசன்!

கட்டுபாடுகளுடன் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை தமிழக அரசு திறக்க முன்வரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அரசு வழங்கிய பொங்கல் பரிசில் சில இடங்களில் தரமற்ற பொருட்கள் இருந்ததாக புகார்கள் எழுந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று எனக் கூறிய அண்ணாமலை, இதற்குக் காரணமான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது முதலமைச்சர் எப்போது நடவடிக்கை எடுப்பார்? என கேள்வி எழுப்பினார். மேலும், மாணவி லாவண்யாவின் தற்கொலை தூண்டப்பட்ட தற்கொலை எனக் குற்றம்சாட்டிய அண்ணாமலை, இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More