Home> Tamil Nadu
Advertisement

கருவில் இருந்தே துரத்திய பகை..! 19 ஆண்டுகள் கழித்து பழிதீர்த்த மகன்!

தந்தையை கொன்றவரின் மகனை 19 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்குப்பழியாக படுகொலை செய்த இளைஞரின் செயல் மதுரையையே அலறவிட்டுள்ளது.    

கருவில் இருந்தே துரத்திய பகை..! 19 ஆண்டுகள் கழித்து பழிதீர்த்த மகன்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையில் திருச்சியைச் சேர்ந்த ரவி, விருதுநகரைச் சேர்ந்த கருப்பசாமி என்ற இருவரும் இணைந்து கடந்த 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பொருட்காட்சி நடத்தியுள்ளனர். இந்த பொருட்காட்சியில் 25 பேர் பணியாளர்களாக பணியாற்றியதாகவும், இதில் 15 பேர் வடமாநில தொழிலாளர்கள் என கூறப்படுகிறது, இந்நிலையில் இந்த பொருட்காட்சி கடந்த 12ஆம் தேதி முடிந்து இயந்திரங்களை அவிழ்க்கும் பணி நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் இந்த பொருட்காட்சி நடந்த இடத்தின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் வாலிபரின் உடல் ஒன்று பிணமாக மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினர் மற்றும் எழுமலை காவல் நிலைய போலிசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு விசாரணை செய்த போது உயிரழந்தவர் பொருட்காட்சியில் பணியாற்றிய வடமாநில தொழிலாளியான தீபக்குமார் என்பதும், ஜார்கண்ட் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட என்பதும் தெரியவந்தது. இவரை யாரோ படுகொலை செய்து கல்லைக் கட்டி உடலை கிணற்றில் வீசியுள்ளனர்.

 மேலும் படிக்க - கலைஞர் உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு 7.5% வட்டி தரும் மலையரசி தொடர் வைப்பு திட்டம்

உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலிசார் நேரில் ஆய்வு செய்து உடனடியாக உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இந்த படுகொலை தொடர்பாக அவருடன் பணியாற்றிய சுமார் 13 வடமாநில பணியாளர்களை அழைத்து முதற்கட்ட விசாரணையை துவங்கினர். இந்த விசாரணையில் தீபக்குமாரிடன் பணியாற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீரேஸ்குமார், ராபின்குமார் என்ற இரு இளைஞர்கள் முன்பகை காரணமாக தீபக்குமாரை அடித்து கொன்று கல்லைக் கட்டி கிணற்றில் வீசியதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான அதிர்ச்சிகர காரணம் தெரியவந்தது.  

உயிரிழந்த தீபக்குமாரின் தந்தை பினோத்குமார், கடந்த 2004ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் தீரேஸ்குமாரின் தந்தை சுவாகா மனோஜ் சிங் என்பவரை படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த படுகொலையின் போது தீபக்குமார் தனது தாயின் வயிற்றில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் தந்தையை கொன்றவர்களை கடந்த 19 ஆண்டுகளாக பழிக்குப் பழி தீர்க்க தேடி வந்த தீரேஸ்குமாருக்கு, தனது தந்தையை கொன்ற பினோத்குமாரின் மகன் தீபக்குமார், தன்னுடன் எழுமலையில் பொருட்காட்சியில் ஒரே இடத்தில் பணியாற்றி வருவது குறித்து சமீபத்தில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தீபக்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட தீரேஸ்குமார், தனது நண்பனான ராபின்குமாரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு பொருட்காட்சி முடிந்த அடுத்த நாளான 13-ஆம் தேதி இரவு தீபக்குமாருக்கு மது வாங்கி கொடுத்து அடித்து கொலை செய்து கல்லைக் கட்டி கிணற்றில் வீசியதை வாக்குமூலமாக அளித்துள்ளனர். 

இதன் அடிப்படையில் தீரேஸ்குமார், ராபின்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த எழுமலை காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையை கொன்றவரின் மகனை 19 ஆண்டுகளுக்கு பின் பழிக்கு பழியாக படுகொலை செய்து கிணற்றில் கல்லை கட்டி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க - ரேசன் கடையில் இன்று முதல் ரூ. 6 ஆயிரம்... வாங்க எந்த நேரத்தில் போகலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More