Home> Tamil Nadu
Advertisement

Nivar Cyclone Update: புதுச்சேரியில் 144 தடை உத்தரவு, ரத்து செய்யப்பட்ட பஸ், ரயில் விவரம் இதோ

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Nivar Cyclone Update: புதுச்சேரியில் 144 தடை உத்தரவு, ரத்து செய்யப்பட்ட பஸ், ரயில் விவரம் இதோ

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மையம் கொண்டுள்ளது. இது இன்று மாலை மேலும் தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாக நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை முதல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரவலாக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரயில்/பேருந்து சேவைகள் ரத்து:

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல ரயில் மற்றும் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செவ்வாய் முதல் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் மாவட்ட பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் சேவைகளும் சில மாவட்டங்களில் முழுமையாகவும் சில மாவட்டங்களில் பாதியும் நிறுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு:

புதுச்சேரியிலும் (Puducherry) பல ரயில் மற்றும் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ளதால் புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் 26ஆம் தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம்:

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர், மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல் உழவன் விரைவு ,சோழன் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சைக்கு செல்லும் ரயில்கள் இன்றும், நாளையும், திருச்சிக்கு செல்லும் ரயில் நாளை மட்டும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ALSO READ: பஸ்கள், ரயில்கள் நிறுத்தம்: நிவர் சூறாவளிக்கு எப்படி தயாராகிறது தமிழகம்

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரங்கள்:

வண்டி எண் 06865 / 06866 சென்னை எக்மோர் – தஞ்சாவூர் – சென்னை எக்மோர் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06795 / 06796 சென்னை எக்மோர் – திருச்சிராப்பள்ளி – சென்னை எக்மோர் சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாதியளவு ரத்து செய்யப்பட்ட சேவைகள்: வண்டி எண் 06232 மைசூரு – மயிலாடுதுறை சிறப்பு ரயில், திருச்சிராப்பள்ளி – மயிலாடுதுறை இடையே நவம்பர் 24-ம் தேதி ரத்து செய்யப்படும்.

வண்டி எண் 06188 எர்ணாகுளம் – காரைக்கால் சிறப்பு ரயில், திருச்சிராப்பள்ளி – காரைக்கால் இடையே நவம்பர் 24-ம் தேதி ரத்து.

வண்டி எண் 02898 புவனேஸ்வர் – புதுச்சேரி சிறப்பு ரயில், சென்னை எக்மோர் – புதுச்சேரி இடையே நவம்பர் 24 அன்று பாதியளவு ரத்தது.

வண்டி எண் 06231 மயிலாடுதுறை – மைசூரு சிறப்பு ரயில், நவம்பர் 25-ம் தேதி மயிலாடுதுறை – திருச்சி இடையே ரத்து.

வண்டி எண் 06187 காரைக்கால் – எர்ணாகுளம் சிறப்பு ரயில், நவம்பர் 25 அன்று காரைக்கால் – திருச்சி இடையே ரத்து.

வண்டி எண் 02083 / 02084 மயிலாடுதுறை – கோயம்புத்தூர் சிறப்பு ரயில், நவம்பர் 25 அன்று திருச்சி – மயிலாடுதுறை – திருச்சி இடையே ரத்து.

வண்டி எண் 02897 புதுச்சேரி – புவனேஸ்வர் சிறப்பு ரயில், நவம்பர் 25-ம் தேதி புதுச்சேரி – சென்னை எக்மோர் இடையே பாதியளவு ரத்து .

வண்டி எண் 02868 புதுச்சேரி – ஹவுரா சிறப்பு ரயில், நவம்பர் 25-ம் தேதி புதுச்சேரி – விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு டிக்கெட்டுக்கான முழு பணமும் திருப்பித் தரப்படும். மின் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு கட்டணத் தொகை தானாக ரீஃபண்டு செய்யப்படும்.

கவுன்டர்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகள் ரயில் புறப்பட்ட 15 நாட்களுக்குள் ரயில்வே கவுன்டரில் இருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

பேருந்து சேவைகளும் நிறுத்தம்:

நிவர் புயலால் பாதிக்கப்படக்கூடும் மாவட்டங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியே பிற மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துக்கள் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று மதியம் 1 மணி முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிவர் புயல் காரணமாக  , புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும், இன்று பிற்பகல் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து  மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: வங்கக்கடலில் உருவானது நிவர் புயல், இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More