Home> Tamil Nadu
Advertisement

நீட் தேர்வு தேதி அறிவிப்பு... விலக்கு பெறுமா தமிழகம்? குழப்பத்தில் மாணவர்கள்!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

நீட் தேர்வு தேதி அறிவிப்பு... விலக்கு பெறுமா தமிழகம்? குழப்பத்தில் மாணவர்கள்!

எம்.பி.பி.எஸ், பி,டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் பல மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பல விஷயங்களில் முரண்பட்டு நின்றாலும் நீட் தேர்வை ரத்து செய்வதில் மட்டும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட காலமாக கிடப்பில் இருந்த இந்த தீர்மானத்தை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்தது. 

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவிக்கு வந்ததும் சட்டப்பேரவையில் மீண்டும் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

தீர்மானம் அனுப்பி பல மாதங்கள் கழிந்த பின்னரும் ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் இருந்தார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்பிய நிலையில் மசோதா நிராகரிக்கப்படுவதாக ஆளுநர் திடீரென அறிவித்தார். 

மேலும் படிக்க | நீட் தேர்வு தொடர்ந்தால் சுகாதார பாதுகாப்பு முறையில் மோசமான பாதிப்பு ஏற்படும்

fallbacks

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் மீண்டும் நீட் விலக்கு மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து நீட் மசோதா மீது விரைவாக நடவடிக்கை எடுத்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி அளித்தார். 

இந்த நிலையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு நாளை மறுநாள் முதல்(ஏப்ரல் 2-ம் தேதி) மே 7-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏதேனும் பிழை ஏற்பட்டால் திருத்தம் மேற்கொள்ள 5 நாள் அவகாசம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டு தோறும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சி எடுக்கப்படும் என தமிழக அரசியல் கட்சிகள் முழங்கி வருவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், இறுதியில் நீட் தேர்வு நடத்தப்படுவதால் அரசியல்வாதிகளை நம்பிய மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதும் தொடர்கதையாகியுள்ளது. 

மேலும் படிக்க | NEET Suicide: நீட் பயத்தால் மற்றுமொரு தற்கொலையா? உண்மை என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More