Home> Tamil Nadu
Advertisement

நீட் தமிழகத்திற்கு அவசியம் - அண்ணாமலை

நாளை நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு நீட் அவசியம் என்பதை பா.ஜ.க வலியுறுத்தும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

நீட் தமிழகத்திற்கு அவசியம் - அண்ணாமலை

பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு பஞ்சாப்பில் ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தமிழக ஆளுநரை சந்தித்து மனு ஒன்றை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அளித்தார். இந்த சந்திப்புக்குபிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்பார் எனத் தெரிவித்தார். அவர் தமிழகத்திற்கு நீட் ஏன் அவசியம்? என்பதையும் பா.ஜ.க சார்பில் கருத்துகளை முன்வைப்பார் என்றும் அண்ணாமலை கூறினார்.  

ALSO READ | இனி இந்த துறைகளுக்கும் TNPSC தேர்வு..!

தொடர்ந்து பேசிய அவர், நீட் விவகாரம் தொடர்பாக ஆளுநர் காலம் தாழ்த்தவில்லை என்றும், ஆளுநர் முடிவு எடுப்பதற்கான கால அவகாசத்தை, கொடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக் கொண்டார். மேலும் ராஜேந்திர பாலாஜிக்கு உதவி செய்ததாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டதாகவும் அவர்கள் ராஜேந்திரபாலாஜிக்கு எதற்காக உதவி செய்தார்கள்? என்பதற்கான விளக்கத்தை பாஜக நிச்சயம் கேட்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். ராஜேந்திர பாலாஜி  குற்றமற்றவர் என்பதை  நிரூபிப்பார் என்றும் நீதிமன்றம் செல்லும் வரையில் ஒரு நபர் குற்றவாளி இல்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

ALSO READ | டிவிட்டரில் வேலை கேட்ட திமுக எம்.பி

நீட் தீர்மானத்திற்கு  ஆளுநர்  ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து அவர்  பதவி விலக  வேண்டும் என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு கூறியது ஏற்று கொள்ள முடியாது எனக் கூறிய அண்ணாமலை, ஆளுநர் உரையில் மாநில அரசு எழுதி கொடுப்பதைத்தான் ஆளுநர் படிக்கிறார், அது அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடைமுறை தான் என்றார். மேலும், ஒமிக்ரான் பரவல் காரணமாக பிரதமரின் தமிழக பயணம் ரத்தாகி உள்ளது, பிரதமர் தமிழகம் வரும்போது கம்பீரத்தோடு வரவேண்டும் தொற்று பரவல் குறைந்த பின்னர் அவர் மீண்டும் தமிழகம் வர உள்ளார் எனக் கூறினார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More