Home> Tamil Nadu
Advertisement

வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சேலத்தில் தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 3.35 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட இருக்கிறது.   

 வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சேலத்தில் தொடக்கம்

இயற்கை எரிவாயு திட்டம்
 
நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் முழுவதும் ரூ.1300 கோடி மதிப்பில் 3.35 லட்சம் வீடுகளுக்கும், 158 பெட்ரோல் பங்குகளுக்கும் இயற்கை எரிவாயு வழங்கிடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் இரும்பாலையில் இயற்கை எரிவாயு மையம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | CBSE மற்றும் ஐசிஎஸ் கல்வி முறையிலும் தமிழ் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

சேலத்தில் தொடக்கம்

இங்கிருந்து சேலம் மாநகரப் பகுதி முழுவதும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இயற்கை எரிவாயு மையத்தினை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பைப்லைன்ஸ் பிரிவு இயக்குநர் டி.எஸ்.நானாவேர் தொடங்கி வைத்தார். 450 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 50 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் குழாய் மூலமாக தொடங்கியுள்ளது.

அதிகாரிகள் பங்கேற்பு

இதனைத் தொடர்ந்து ஜாகீர் அம்மாபாளையம், திருவாக்கவுண்டனூர் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று, இரும்பாலை ஆவின் பெட்ரோல் பங்க்கில் வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு நிரப்பும் பணியும் இன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நகர இயற்கை எரிவாயு செயல் இயக்குநர் எஸ்.கே.ஷா, தென் மண்டல குழாய் பாதை பிரிவு செயல் இயக்குநர் சைலேஷ் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் படிக்க | பப்ஜியில் மலர்ந்த காதல்: போக்சோவில் கைதான இளைஞர் - பெற்றோருடன் சென்ற 17 வயது சிறுமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More