Home> Tamil Nadu
Advertisement

கலாம் போல உருவாக என்ன செய்ய வேண்டும்? முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் பதில்!

சென்னையில் உள்ள ஜேப்பியிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இதில் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கலந்து கொண்டார்.   

கலாம் போல உருவாக என்ன செய்ய வேண்டும்? முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் பதில்!

சென்னையில் ஜேப்பியார் மற்றும் ஜேப்பியார் எஸ்ஆர்ஆர் பொறியியல் கல்லூரிகளின் 18வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ரெஜினா ஜே முரளி தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பத்ம பூஷன் நம்பி நாராயணன் மற்றும் ஜிடோ பிஸினஸ் நெட்வொர்க்கின் தலைவர்  ராஜேஷ் சந்தன் ஆகியோர்  கலந்து கொண்டனர். 

இந்த விழாவில், முதுகலை பொறியியலில் கணினி அறிவியல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி சுபவர்ஷினி மற்றும் அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்ற 16 மாணவர்களுக்கு  விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. கல்வி மற்றும் கூடுதல் பாடத்திட்ட  செயல்திறனுக்காக  17 மாணவர்களுக்கு ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை விருதுகளும் வழங்கப்பட்டன.  

ஜேப்பியார் கல்விக்குழுமத்தில் கல்லூரி வளாகத் தேர்வு மூலம் பல மாணவர்கள் சிறந்த பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, உயர்நிலைக் கல்வியில் 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற  மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் இலவசக் கல்வி ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | ஆட்சியைக் கலைக்க யோசித்துதான் பார்க்கட்டுமே: எல்.முருகனுக்கு உதயநிதி பதிலடி

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்

பட்டமளிப்பு விழாவில் பல்வேறு பிரிவுகளில் 862 பேருக்கு இளங்கலை பட்டங்களும், 74 பேருக்கு முதுகலை பட்டங்களும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் உரையாற்றிய நம்பி நாராயணன், "மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு இல்லாமல் எலக்ட்ரானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் பொறியியல் படிப்புகள் இல்லை. ஏனெனில் அந்த பொறியியல் படிப்புகளில் பயன்படுத்தும் கருவிகளை உருவாக்குவது மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு. மேலும் தான் பொறியியல் பட்டம் பெற்ற  பிறகு  தகுதி வாய்ந்த பொறியாளர் என்கிற எண்ணம் வந்தது என்றும் அதற்கு தான் செய்த பிராஜெக்ட் தான் காரணம்” என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், “பட்டம் பெற்ற உடன் பணம் சம்பாதிக்கும் நிரப்பந்தம் ஏற்படுவதால் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிக்கு சேர்கின்றனர். இதில் பெரும்பாலானோர் கூட்டல் கழித்தல் வேலை தான் செய்கின்றனர்” என்றார். 

மேலும், செய்யும் பணி திருப்தி தரக்கூடியதாக இருக்க வேண்டும். வாழ்வில் முக்கியமானது உங்களை உருவாக்கும் சிறந்த திட்டங்கள் தான் அதனை கண்டறிய வேண்டும் என்று கூறிய அவர், “உங்களை திருப்திபடுத்தும் வேலை தான் உங்களை அப்துல்கலாம் போன்று உருவாக்கும்" என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

நம்பி நாராயணன்:

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி, நம்பி நாராயணன்.  2019ஆம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இவரது வாழ்க்கையை வைத்து ராக்கெட்டரி:நம்பி எஃபெக்ட் என்ற படம் எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு சமீபத்தில் தேசிய விருதும் கிடைத்தது. 

மேலும் படிக்க | காதலர்கள் வீட்டை விட்டுச் சென்றதால் ஆத்திரம்: காதலனின் வீட்டை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய பெண் வீட்டார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More