Home> Tamil Nadu
Advertisement

தெருக்களில் கழிவுநீர் விட்டால் ரூ.2 லட்சம் அபராதம்!!

சென்னை குடியிருப்புவாசிகள் தெருக்களில் கழிவுநீர் விட்டால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தெருக்களில் கழிவுநீர் விட்டால் ரூ.2 லட்சம் அபராதம்!!

சென்னை: சென்னை குடியிருப்புவாசிகள் தெருக்களில் கழிவுநீர் விட்டால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி குடியிருப்பு வாசிகள் தெருக்களில் கழிவு நீர் திறந்து விட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். 

மேலும் வணிக வளாகங்கள் கழிவு நீரை திறந்து விட்டால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More