Home> Tamil Nadu
Advertisement

Sanatana Dharma Issue: உதயநிதிக்கு 'செக்' - ஓயாத சனாதன தர்மம் பிரச்னை... நீதிமன்றம் புதிய உத்தரவு

Minister Udhayanidhi Stalin Sanatana Dharma Issue: சனாதன தர்மம் தொடர்பாக பேசிய வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக கோரி பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

Sanatana Dharma Issue: உதயநிதிக்கு 'செக்' - ஓயாத சனாதன தர்மம் பிரச்னை... நீதிமன்றம் புதிய உத்தரவு

TN Minister Udhayanidhi Stalin Sanatana Dharma Issue Case Update in Tamil: சென்னை தேனாம்பேட்டையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சனாதன தர்ம ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. செப். 2ஆம் தேதி நடைபெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்க தான் வேண்டும எனவும், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிக்க தான் வேண்டும், எதிர்க்க முடியாது எனவும் கூறியிருந்தார்.

சனாதன தர்ம சர்ச்சை

அதேபோல், சனாதன தர்மத்தையும் எதிர்க்க கூடாது, அதனை ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தார். மேலும், அந்த உரையில்,"சனாதானம் என்ற சொல் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. அதன் அர்த்தம் நிலையானதாகவும் மாற்ற முடியாததாகவும் இருப்பது. ஆனால் நாம் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது" எனவும் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இந்த பேச்சு தமிழ்நாட்டில் பொதுவெளியில் கவனம் பெறாத நிலையில், வட இந்தியாவில் பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. குறிப்பாக, பாஜக மற்றும் வலதுசாரியினர் இந்த விவகாரத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்து மத சாமியார் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து, உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார் என்பதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.  

மேலும் படிக்க | காங்கிரஸ் தோல்விக்கு உதயநிதிதான் காரணமா? - சனாதான சர்ச்சையும் வடஇந்திய பின்னடைவும்!

உதயநிதி மீது வழக்குப்பதிவு

தொடர்ந்து, நாடு முழுவதும் பலரால் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றிலும் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், இந்த விவகாரத்தில் தான் பேசிய கருத்துகளை பின் வாங்கப்போவதில்லை எனவும் சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக கூறி வந்தார். 

அந்த வகையில், கடந்தாண்டு செப். 4ஆம் தேதி அன்று பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கறிஞர் கவுஷலேந்திர நாராயணன் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரில், "சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துகள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளது" என குறிப்பிட்டிருந்தார். 

பிப்.13 அன்று ஆஜராக உத்தரவு

இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) கீழ் பல பிரிவுகளில் அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்டப்டன. குறிப்பாக, 153 (A), 295 (A), 298, 500 மற்றும் 504 உள்ளிட்ட பிரிவுகள் இவர் மீது போடப்பட்டிருந்தன. இந்த வழக்கை எம்பி/எம்எல்ஏக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளுக்கான பாட்னா சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. 

விசாரணையின் போது, உதயநிதி ஸ்டாலினை நேரிலோ அல்லது அவரது தரப்பு வழக்கறிஞரோ ஆஜராகுமாறு பாட்னா சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது, இந்த சனாதன தர்ம வழக்கு தொடர்பாக பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாட்னாவில் உள்ள எம்பி/எம்எல்ஏ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜன. 15ஆம் தேதி உத்தரவு

இந்த உத்தரவானது கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று பாட்னாவின் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மற்றும் எம்பி/எம்எல்ஏ மீதான வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி, சரிகா வஹாலியாவின் கையொப்பத்துடன் வழங்கப்பட்டது. குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜனவரி 6ஆம் தேதி அன்று இந்த வழக்கு எம்பி/எம்எல்ஏ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியிருந்தது. மேலும், உதயநிதி ஸ்டாலின் மீது இதே சர்ச்சை காரணமாக உத்தர பிரதேச மாநிலம் முசாபர்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இதேபோன்ற வழக்கும் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சனாதன விவகாரம்... கடமை தவறிய காவல்துறை - தமிழக அமைச்சர்களுக்கு நீதிபதி அறிவரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More