Home> Tamil Nadu
Advertisement

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

யேசுபிரான் பிறந்த நாளான இன்று கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். வீடுகளில் வண்ண அலங்கார குடில்கள் அமைத்தும் புத்தாடை அணிந்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனிப்புகளை வழங்கியும் அவர்கள் கொண்டாடினர்.

உலகின் அனைத்து பகுதிகளிலும் உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தலைநகர் டெல்லியில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டுத் திருப்பலியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்து பங்கேற்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

வடகிழக்கு மாநிலங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. கர்நாடகாவின் பெங்களூருவில் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் கதீட்ரல் தேவாலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

பல இடங்களில் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலிகள் நடைபெற்றன. அப்போது கிறிஸ்துமஸ் நற்செய்திகள் வாசிக்கப்பட்டன.

Read More