Home> Tamil Nadu
Advertisement

மேட்டூர் அணை நீர்மட்டம்: 50 அடியை தாண்டியது!

மேட்டூர் அணை நீர்மட்டம்: 50 அடியை தாண்டியது!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. நாள் ஒன்றிற்கு சராசரியாக 3.5 அடி உயர்ந்து வருகிறது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 மாதங்களுக்குப் 50 அடியை தாண்டியுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வறட்சி காரணமாக குறைந்துகொண்டே வந்தநிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிரித்ததால் அங்கிருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. 

இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தற்போது வினாடிக்கு 21,947 கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே தற்போது அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது.

முன்னதாக குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணை நேற்று திறக்கப்பட்டது. தொடர்ந்து 12 நாட்களுக்கு அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More