Home> Tamil Nadu
Advertisement

உசார்!! மேட்டூர் அணையின் நீர் திறப்பு அதிக்கரிப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. கடல்போல காட்சியளிக்கும் அணை. மகிழ்ச்சியில் விவசாயிகள்.

உசார்!! மேட்டூர் அணையின் நீர் திறப்பு அதிக்கரிப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது. 

இதையடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியில் இருந்து 119.41 அடியாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, காலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 64,595 கன அடியில் இருந்து 68,489 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டத்தின் இருப்பு அளவானது சுமார் 92.53 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், இன்று மாலை அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நீரின் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 65,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

நாளை காலை 10 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 80,000 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தஞ்சாவூர், சேலம், திருச்சி உட்பட பல மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறும், யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.

Read More