Home> Tamil Nadu
Advertisement

மதுரையில் தொடங்கிய ’மார்கழியில் மக்களிசை’

மண் சார்ந்த மக்களிசையான நாட்டுப்புற இசையை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ஆண்டுதோறும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தொடங்கிய ’மார்கழியில் மக்களிசை’

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், ’மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டுப்புற இசையை மக்களிடம் கொண்டு செல்லவும், அதன் பாரம்பரியம் மற்றும் இசையின் மேன்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் விதமாக நடத்தப்படும் இந்த நிகழ்சியில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தாரை, தப்பட்டை, மேளம், கரகாட்டம், ஒப்பாரி பாடல்களைப் பாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 

ALSO READ | மத்திய அரசின் அரசாணைப்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் - ஓ.பி.எஸ்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், மார்கழியில் மக்களிசை மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார். மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். நாட்டுப்புற இசை மக்களுக்கான இசை, அதனை மக்களிடத்தில் கொண்டு செல்வது தான் இந்த மார்கழியில் மக்களிசையின் நோக்கம் எனத் தெரிவித்த அவர், கவனிக்கப்படாத கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு பெற்று தங்களின் திறமைகளை உலகுக்கு அடையாளம் காட்டுவதற்கான களமாகவும் அமைந்துள்ளதாக கூறினார். 

தொடர்ந்து பேசிய பா.ரஞ்சித், " நாட்டுப்புற இசைகளை மேடை ஏற்ற அரசு தரப்பு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். நாட்டுப்புற கலைகளை ஊக்கப்படுத்த வேண்டும், கலைகளின் தன்மையை புரிந்து வாய்ப்பு அளித்தால் இந்த கலை அடுத்த பரிமாணத்தை அடையும். நாட்டுப்புற கலைகளில் இளம் கலைஞர்களை உருவாக்க கல்லூரிகளில் வாய்ப்பும், போதிய விழிப்புணர்வும் வழங்க வேண்டும்”என்றார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார்.

ALSO READ | ஆசிரியரின் பாலியல் அத்துமீறலால் மீண்டும் ஒரு மரணம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More