Home> Tamil Nadu
Advertisement

இப்படி செஞ்சா கள்ளழகர் சிலைக்கே பாதிப்பு : எச்சரிக்கும் பட்டர்

மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் கடைபிடிக்கப்படும் நடைமுறையால் அழகர் சிலை பாதிக்கப்படும் என பட்டர்கள் கூறுகின்றனர்.

இப்படி செஞ்சா கள்ளழகர் சிலைக்கே பாதிப்பு : எச்சரிக்கும் பட்டர்

கோவில் நகரமான மதுரையில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி கோவில் வளாகத்திலேயே நடைபெற்று வந்த சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

அழகர் கோவில் சித்திரைத் திருவிழா மதுரை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் முக்கியத்துவம் வாய்ந்தது. கள்ளழகர் தங்க குதிரை மீது அமந்தபடி ஆற்றில் இறங்கும் இந்த நிகழ்வு ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால் மக்கள் வெள்ளம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

மேலும் படிக்க | ஏப்ரலில் நிலை மாறும் 9 கிரகங்கள்; சில ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம் தான்

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் போது காலங்காலமாக பக்தர்கள் விசிறி வீசியும், கள்ளழகரை போல் வேடமணிந்து தண்ணீர் பீச்சியும், திரி எடுத்தும், சர்க்கரை தீபம் ஏற்றியும் வரவேற்று வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.இதில் தண்ணீர் பீச்சும் வேண்டுதலின் தவறான வழிமுறைகள் காரணமாக அழகர் சிலையில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அழகருடன் தங்கக்குதிரையில் வரும் பாலாஜி பட்டர் தெரிவித்துள்ளார். 

fallbacks

இதுகுறித்து கள்ளழகர் கோவிலின் பாலாஜி பட்டர் கூறுகையில், காலங்காலமாக மதுரைக்கு தங்கக்குதிரையில் வரும் கள்ளழகரை பக்தர்கள் தண்ணீர் பீச்சி வரவேற்பது வழக்கம். தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக தற்போது தண்ணீர் பீச்சும் பக்தர்களில் பெரும்பாலானோர் பாரம்பரிய துருத்திப் பைப்க்கு பதிலாக பிரஸர் பம்ப் பயன்படுத்தி தண்ணீர் பீச்சுகின்றனர். தங்கக்குதிரையில் வரும் அழகர் சிலையானது மன்னர் காலத்துத் தொன்மையுடையது. பிரஸர் பம்ப் பயன்படுத்தி தண்ணீர் பீச்சி அடிப்பதன் மூலம் அழகர் சிலையில் சேதம் ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இனி சனிபகவானின் வக்ர பார்வை இருக்காது

மேலும் அழகருக்கு அனுவிக்கப்படும் தங்க ஆபரணங்களிலும் சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பக்தர்கள் பாரம்பரிய துருத்திப் பை பயன்படுத்தி தண்ணீர் பீச்சுவதே புன்னியத்துக்குரிய வேண்டுதல்கள் ஆகும். பிரஸர் பம்ப் பயன்படுத்துவது சிறிதளவும் சரியில்லை. இது கள்ளழகர் சிலையின் பாதுகாப்புக்கே குந்தகம் விளைவிக்கும் செயல் என கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More