Home> Tamil Nadu
Advertisement

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை

நாங்குநேரியில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை

நான்குநேரி அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் அதே பகுதியில் வசிக்கும் தனது தாய் மாமன் பெரியசாமியின் மகன் சுப்பையாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சுப்பையாவிற்கு மூத்த அண்ணன் இருவர் திருமணமாக நிலையில் உள்ளதால், இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுப்பையா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார். இதனை அடுத்து அவரை பெற்றோர் பாளை ஐக்கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி சுப்பையா உயிரிழந்தார்.  

இந்நிலையில் நேற்று பிரேத பரிசோதனை முடிந்து சுப்பையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. பெண்ணின் பெற்றோர் துக்க வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சுப்பைய்யாவின் காதலி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாலை சுமார் 3 மணி அளவில் சுப்பையாவின் இறுதி சடங்கு முடிந்ததும் வீட்டுக்கு வந்த தாய் சரஸ்வதி வீட்டில் கதவு உள்பக்கமாக பூட்டியிருப்பது கண்டு சந்தேகம் அடைந்தார். ஜன்னல் வழியாக பார்த்த போது சுதா தூக்கி தொங்கி கொண்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அங்கு வந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று சுதாவின் உடலை மீட்பு நான்குநேரி அரசு ஆஸ்பத்திரியிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

மேலும் படிக்க | பெற்ற மகளை தாயே அடித்துக் கொன்ற கொடூரம்! திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்!

தகவல் அறிந்து அங்கு வந்த நான்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தினார். இதனிடையே, அரசு மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் சுதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளை., ஐக்கிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.  இதை அறிந்த சுதாவின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நான்குநேரியில் பிரேத பரிசோதனைக் கூட்டம் இருந்தும் டாக்டர்கள் இறந்தவர்களின் உடல்களை பாளை., ஐக்கிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுவதாகவும் முறையாக பணிக்கு வருவதில்லை என குற்றம்சாட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டம் செய்ய முயற்சி மேற்கொண்டனர். தகவல் அறிந்து  அங்கு வந்த நாங்குநேரி ஏஎஸ்பி., ரஜத் சதுர்வேதி அவர்களை சமாதானப்படுத்தி நான்குநேரியில் பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து  மாலை 6 மணிக்கு  சுதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து நான்குநேரி போலீசார் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | சென்னையில் 11ம் வகுப்பு மாணவி தூக்கில் சடலமாக கண்டெடுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More