Home> Tamil Nadu
Advertisement

மக்களவையில் தொடரும் அமளி, அதிமுக MP-கள் 7 பேர் இடைநீக்கம்!

மேகதாது விவகாரத்தில் நியாயம் கோமி மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக-வை சேர்ந்த 7 MP-க்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சஸ்பெண்ட் செய்தார்!

மக்களவையில் தொடரும் அமளி, அதிமுக MP-கள் 7 பேர் இடைநீக்கம்!

மேகதாது விவகாரத்தில் நியாயம் கோமி மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக-வை சேர்ந்த 7 MP-க்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சஸ்பெண்ட் செய்தார்!

மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே அதிமுக MP-க்கள் பாராளுமன்ற மக்களவையில் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று MP-க்கள் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, அமளியில் ஈடுப்பட்ட அமைச்சர்களை மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னரும் அமளி நீடித்ததால், அதிமுக உறுப்பினர்கள் 24 பேரை, 5 நாட்களுக்கு கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், அதிமுக MP-க்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட்டனர். 

இதன் காரணமாக அவையை 12 வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதனையடுத்து அவை 12 மணிக்கு கூடியபோதும் அமளி நீடித்தது. அதிமுக உறுப்பினர்களுடன் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

இதையடுத்து அருண்மொழித்தேவன், கோபாலகிருஷணன், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், மருதுராஜா உள்ளிட்ட 7 அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 பேரும் மக்களவையில் தொடர்ந்து 4 அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Read More