Home> Tamil Nadu
Advertisement

மக்களவை தேர்தல் 2019: மநீம வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகலாம்?

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தலில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பது இன்று மாலை வெளியாகலாம்.

மக்களவை தேர்தல் 2019: மநீம வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகலாம்?

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்று உள்ளதால், தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று கமல்ஹாசன் தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் சார்பாக மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல்கள் வந்துள்ளது. இதனால் இந்த பொதுகூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் யார்? மக்களவை தேர்தலில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பது அநேகமாக இன்று மாலை வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த பொதுகூட்டத்தில் கலந்துக்கொள்ள இன்று திருநெல்வேலி மாவட்டம் செல்கிறார் கமல்ஹாசன்.

 

Read More