Home> Tamil Nadu
Advertisement

திரைப்படம், தொலைக்காட்சி தொடர்பான பணிகளை ஜூன் 30 வரை நிறுத்தி வைப்பு: FEFSI

ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை தமிழக அரசின் ஊரடங்கு நீட்டிப்பை கடைப்பிடித்து, திரைப்படம் (Flim) மற்றும் தொலைக்காட்சி (Television) தொடர்பான பணிகள் நிறுத்தம் என FEFSI அமைப்பு தெரிவித்துள்ளது.

திரைப்படம், தொலைக்காட்சி தொடர்பான பணிகளை ஜூன் 30 வரை நிறுத்தி வைப்பு: FEFSI

சென்னை: ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை தமிழக அரசின் (Lockdown in Tamil Nadu) ஊரடங்கு நீட்டிப்பை கடைப்பிடித்து, திரைப்படம் (Flim) மற்றும் தொலைக்காட்சி (Television) தொடர்பான பணிகளை நிறுத்துமாறு தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) அழைப்பு விடுத்துள்ளது.

இந்த செய்தியும் படிக்கவும் | சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு...என்ன மூடப்படும்.. என்ன திறக்கப்படும்?

கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று நோயால் (Coronavirus Death) அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை நாடு சந்தித்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் பாதிப்பு மற்றும் இறப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் திங்களன்று மாநிலத்தில் 44 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் கடந்த இரண்டு நாட்களில் இறந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல்கள் படி ஜூன் 11 முதல் ஜூன் 15 வரை சுமார் 130 இறப்புகள் தமிழ் நாட்டில் (Coronavirus in Tamil Nadu) பதிவாகியுள்ளன. இதையடுத்து மாநிலத்தில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 479-ஆக அதிகரித்துள்ளது.

இந்த செய்தியும் படிக்கவும் | COVID-19: அரசு மற்றும் பெப்ஸி தொழிலாளர்கள் என 1.25 கோடி நிதியுதவி அளித்த நடிகர் அஜித்

தமிழ் நாட்டை பொறுத்த வரை சென்னை (Chennai) மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வட்டங்களில் மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாவலின் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஜூன் 19 முதல் 30 வரை சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கை தமிழக அரசு நேற்று (திங்கள்கிழமை) அறிவித்துள்ளது.

அதாவது தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பேட்டை மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த 4 மாவட்டங்களிலும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு (Lockdown) அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 மற்றும் 28ம் ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20ம் தேதி நள்ளிரவு முதல் 22ம் அதி காலை வரை எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியும் படிக்கவும் | Coronavirus: FEFSI தொழிலாளர்களுக்கு Nayanthara ரூ .20 லட்சம் நன்கொடை

இந்தநிலையில், ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை தமிழக அரசின் ஊரடங்கு நீட்டிப்பை கடைப்பிடித்து, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்பான பணிகளை நிறுத்துமாறு தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (Film Employees Federation of South India) அழைப்பு விடுத்துள்ளது. 

அதன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், FEFSI இன் தலைவர் ஆர்.கே.செல்வமணி (RK Selvamani) கூறியது, ஊரடங்கு மீண்டும் போடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு நிதிஉதவி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த செய்தியும் படிக்கவும் | கொரனோ பாதிப்பு: நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி

fallbacks

Read More