Home> Tamil Nadu
Advertisement

LIVE TN Rain Updates: மக்களுக்கு நிம்மதியான செய்தி: நாளை முதல் மழை குறையும்

Tamil Nadu Weather:காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியதால் சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. வெள்ள மீட்புப் பணிகளை மாநிலம் முழுவதும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது 

LIVE TN Rain Updates: மக்களுக்கு நிம்மதியான செய்தி: நாளை முதல் மழை குறையும்
LIVE Blog

Tamil Nadu Weather: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நவம்பர் 11-ஆம் தேதி மாலைக்குள் கரையைக் கடக்கும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது.

இந்த வானிலை இன்று (நவம்பர் 11) மாலைக்குள் புதுச்சேரிக்கு வடக்கே காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று (புதன்கிழமை) இடைவிடாமல் லேசானது முதல் மிதமானது வரை பெய்த மழை மாலையில் வேகம் பிடித்தது.அதன்பிறகு தொடர்ந்து விடிய விடிய மழை பெய்தது.

இன்றும் (வியாழக்கிழமை) எதிர்பார்க்கப்படும் கடுமையான மழைக்கு முன்னதாக IMD சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வெள்ள மீட்புப் பணிகளை தொடர்ந்து தமிழக அரசு கவனித்து வருகிறது. 

11 November 2021
21:00 PM

தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

19:45 PM

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியதால் சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது

17:00 PM

மழை ஓய்ந்துவிடும் : வானிலை அறிவிப்பால் மக்கள் நிம்மதி

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுவிழக்க வாய்ப்புள்ளதால் தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை நாளை முதல் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்களுக்கு பெரிய நிம்மதி ஏற்பட்டுள்ளது. 

16:00 PM

 சென்னையின் பல்வேறு பகுதிகளில் நீர்த்தேக்கம் 

தொடர் மழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிக நீர்த்தேக்கம் உள்ளது. மக்களின் நடமாட்டம் மற்றும் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு சாலை மற்றும் வடபழனியிலிருந்து வந்துள்ள காட்சிகள்.

 

14:30 PM

பெண் காவல் ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு:
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி அவரின் உயிரை மீட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு குவிகிறது.

 

14:00 PM

மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர்: அவதியில் நோயாளிகள்

சென்னையை அடுத்த குரோம்பேடை அரசு பொதுமருத்துவமனையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை விடிய விடிய கொட்டிய மழையால் மருத்துவமனை வளாகத்தில் வெள்ளநீர் புகுந்து சுமார் 3 அடி வரை தேங்கியுள்ளது. இதனால் மருத்துவமனையில் உள்ள உள்நோளிகள் மற்றும்  குழந்தை பெற்ற தாய்மார்கள் அனைவரையும் மாற்று இடங்களுக்கு அதிகாரிகள் அப்புறபடுத்தினர். மேலும் மருத்துவமனையின் பின்புறம் உள்ள பிணவறை முழுவதுமாக நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால உள்நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாவது மட்டும் இல்லாமல்  வெளிநோயாகிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. 

13:45 PM

விமானங்களின் சேவை நிறுத்தம்:
சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் சேவை மாலை 6 மணி வரை தற்காலிகமாக நிறுத்தம் என AAI அறிவிப்பு.

 

 

13:15 PM

முதல்வரிடம் தொலைபேசியில் பேசிய கவர்னர்:
தமிழ்நாட்டில் பெய்து வரும் மழை நிலவரம், வெள்ளத்தின் பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தொலைபேசி வாயிலாக தமிழக முதல்வரிடம் கவர்னர் கேட்டறிந்தார்.

12:45 PM

பள்ளி-கல்லூரி விடுமுறை:
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

12:30 PM

மீட்புப் பணிகள்:
புதுக்கோட்டை, சேலம், ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மீட்புப் பணிகளுக்காக சுமார் 150 பேர் சென்னை வந்துள்ளனர் என சென்னை தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தென்சென்னையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் கூறினார்.

 

12:00 PM

மழை பாதிப்பு ஆய்வுக் கூட்டம்:
தமிழகத்தில் மழை வெள்ள நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடைபெற்றது.

 

11:30 AM

தொடரும் கனமழை: வேரோடு சாய்ந்தது மிகப் பழமையான மரம்

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் இருந்த மிகப் பழமையான தூங்குமூஞ்சி மரம் மழையின் தாக்கத்தால் அடியோடு பெயர்ந்து விழுந்தது. இதன் காரணமாக மகாலிங்கபுரம் இருவழி சாலை ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

10:45 AM

முதலமைச்சர் அவசர ஆலோசனை:
வடகிழக்கு பருவமழை நடவடிக்கை  தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை செய்கிறார்.

10:15 AM

இயல்பு வாழ்க்கை பாதிப்பு:
புதுச்சேரியில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

 

10:00 AM

சென்னையில் இருந்து சுமார் 160  கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது:
நேற்று நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்பொழுது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160  கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த  12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு  ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கடந்து செல்லும். இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்  மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் தரைக்காற்று 40 முதல் 45  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன  முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும்.

 

09:30 AM

சாலைகளில் தேங்கி மழைநீர்:
கனமழை காரணமாக சென்னை கோடம்பாக்கம் மற்றும் அசோக் நகர் பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

 

09:15 AM

கனமழை பெய்ய வாய்ப்பு:
தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

08:15 AM

தொடர் கனமழையால் சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது!

 

08:15 AM

வட கடலோர மாவட்ட மக்களுக்கு காற்று எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக வட தமிழகக் கடலோரப் பகுதியான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 மணி நேரத்தில் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

fallbacks

08:00 AM

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அபாய எச்சரிக்கை:
மக்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்து நீர் நிலை உயர்ந்து கொண்டே இருப்பதால் குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தன்னார்வலர்கள் அபாய எச்சரிக்கை கொடுத்து  கொண்டிருக்கின்றனர்.

 

07:45 AM

புளியந்தோப்பு மக்களுக்கு காலை உணவு:
15000  மேற்பட்ட மக்களுக்கு புளியந்தோப்பு பகுதியில் காலை உணவு வழங்குவதற்காக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தன்னார்வலர்கள் வாகனத்தில் உணவை ஏற்றிச் செல்கின்றனர்.

 

07:45 AM

மழை நிலவரத்தை கண்காணித்து வரும் தமிழக அமைச்சர்:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திலிருந்து மழை நிலவரத்தை கண்காணித்து வருகின்றார். 

 

07:30 AM

13 மாவட்டங்களில்  இடியுடன் கூடிய கனமழை:
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

07:30 AM

வட கடலோர தமிழகத்திற்கு காற்று எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கத்தால் அடுத்த ஆறு மணி நேரத்தில்  வட தமிழக கடலோர மேற்பரப்பில் காற்று வேகம் 40 கி.மீ வேகத்தில் பலமாக வீசும் என்றும் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.  எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

07:30 AM

மிகவும் எச்சரிக்கை பயணிக்க வேண்டும்: 
இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் மிகவும் எச்சரிக்கையுடன் அவசியமான தேவைகளுக்கு மட்டும் பயணிக்க வேண்டும். சாலைகளில் குழி பள்ளம் மற்றும் நீர் தேங்கி உள்ள பகுதிகளில் மிகவும் எச்சரிக்கையாக பயணிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

07:30 AM

மாநிலம் முழுவதும் மீட்புப் பணிகளுக்கு 75,000 போலீஸார்:
IMD சிவப்பு எச்சரிக்கையை சமிக்ஞை செய்த நிலையில், தமிழகம் முழுவதும் வெள்ள மீட்புப் பணிகளுக்காக குறைந்தது 75,000 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சி சைலேந்திர பாபு தெரிவித்தார். மாநில காவல்துறை தலைமையகம் ஒரு அறிக்கையில், மீட்பு ஃபைபர் படகுகள், கையடக்க மரக்கட்டைகள் மற்றும் சுவர் துளையிடும் இயந்திரங்களுடன் சுமார் 250 மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) வீரர்கள் தயாராக உள்ளனர். கயாக்களுடன் குறைந்தது 350 கடலோரப் பாதுகாப்புக் காவலர் சிஐடி போலீஸார், 250 சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் தமிழ்நாடு ஊர்க்காவல் படையின் பேரிடர் மீட்புப் பிரிவில் இருந்து 364 பேர் கொண்ட குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

Read More