Home> Tamil Nadu
Advertisement

Erode East ByPoll Results 2023: ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி

Erode East Election Result: ஈரோட்டில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

Erode East ByPoll Results 2023: ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி
LIVE Blog

Erode East Election Result: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். 

02 March 2023
16:23 PM

'வெற்றி உறுதியானது'
இன்னும் சுமார் 50,000 வாக்குகள் மட்டுமே எண்ண வேண்டியுள்ளதால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. 

16:11 PM

சட்டசபைக்கு செல்லும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றி உறுதியானதை அடுத்து, 38 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபைக்கு செல்லுவார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

16:01 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிலவரம்: 11வது சுற்று
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 57,591 ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளதால், வெற்றி உறுதியாகி உள்ளது. 

15:51 PM

'பாம்பு பிடிப்பவர்களுக்கு முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை'
பொதுவாக பாம்பு பிடிப்பவர்களுக்கு அதற்கான முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. இருளர்‌ பழங்குடியின மக்கள் தொன்று தொட்டு பாம்பு பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளனர். ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய இருளர் பழங்குடியின மக்களை பற்றி ஒருவரும் பேசவில்லை இது வருந்ததக்க விஷயம் என பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு சென்னேரி கிராமத்தில் பாராட்டு விழா நடைபெற்ற நிகழ்ச்கியில் கலந்துகொண்டு பேசிய போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். 

15:42 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிலவரம்: 

திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை

காங்கிரஸ் - 76,301

அதிமுக - 28,239

நாதக - 4,062

தேமுதிக - 605

15:27 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: டெபாசிட் பெற்றார் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு
10வது சுற்று முடிவில் 51,593 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 28 ஆயிரம் வாக்குகளை பெற்று டெபாசிட்டை தக்க வைத்துக்கொண்ட அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு

15:24 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 
10வது சுற்று முடிவில் 51,593 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதியாகி உள்ளது.

15:18 PM

'வெற்றிக்கு காரணம் வாக்குக்கு அதிக பணம்' -நயினார் நாகேந்திரன்
வாக்குக்கு அதிக பணம் கொடுத்ததன் காரணமாகவே இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக நெல்லையில் பாஜக தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி. 

15:06 PM

'மக்கள் தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்கிறேன்'
ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

14:59 PM

அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

 

14:56 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 
9வது சுற்று முடிவில் 54,776 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை 

14:52 PM

பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த கட்சி தான் அதிமுக -அமைச்சர் எஸ்.ரகுபதி
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது திமுக அரசின் சாதனைக்கு கிடைத்த சான்றிதழ். பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த கட்சி தான் அதிமுக. அதைப்பற்றி கூறுவதற்கு எதுவும் இல்லை. ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி வரும் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். ஆறுமுகசாமி அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளது. சட்டத்துறை வல்லுனர்களோடு கலந்து பேசி இந்த வழக்கிலேயே ஆழமான கருத்துக்களை அடுத்தடுத்து எடுத்துரைத்து நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கை கண்டிப்பாக எடுப்போம் என புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி அளித்தார். 

14:50 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் கொண்டாட்டம் 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதையடுத்து உதகையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

14:48 PM

'நான் ஏற்கனவே தேசிய அரசியலில்தான் இருக்கிறேன்' -முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''20 மாத கால திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த மக்கள் அங்கீகாரம் இது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட மிகப்பெரிய வெற்றியை நிச்சயமாக வழங்குவார்கள். வரலாற்றில் பதிவாகக் கூடிய வெற்றியை தந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி. இபிஎஸ் நாலாந்தரப் பேச்சாளர் போல் பேசியதற்கு மக்கள் நல்ல பாடம் தந்துள்ளனர். அயராது பாடுபட்ட அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருக்கு நன்றி'' என்றார். 

அப்பொழுது செய்தியாளர் ஒருவரின், “சார் நீங்க தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார்கள் சிலர்” என்ற கேள்விக்கு, ''நான் தேசிய அரசியலில் தான் இருக்கிறேன். யார் வெற்றிபெற்று பிரதமராக வேண்டும் என்பதை விட யார் பிரதமராக இருக்கக் கூடாது, யார் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் இப்போதைக்கு எங்களுடைய கொள்கை''  என்றார்.

14:46 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 
38,834 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை 

14:08 PM

Erode East Bypoll Results: முதல்வரின் பிறந்தநாள் பரிசாக ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றியை மக்கள் வழங்கியுள்ளனர்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக கூட்டணிக்கு மக்கள் மீண்டும் அளித்துள்ள மகத்தான அங்கீகாரமாகவும் அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி என்பதை உணர்த்துவதாகவும் இவ்வெற்றி அமைந்துள்ளது தொல். திருமாவளவன் ட்வீட்

 

13:51 PM

Erode East Bypoll Results: "இடைத்தேர்தலை எடைத்தேர்தலாக மக்கள் பார்த்துள்ளனர். ஈரோடு வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரம். எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நல்ல பதிலடி கொடுத்துள்ளனர்” - முதலமைச்சர் ஸ்டாலின்

13:47 PM

Erode East Bypoll Results: 20 மாத கால திமுக அரசுக்கு மக்கள் கொடுத்த வெற்றி ஈரோடு கிழக்கு - முதலமைச்சர் ஸ்டாலின்

13:29 PM

Erode East Bypoll Results:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வராலாறு படைக்கும் காங்கிரஸ். அதிக வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் முன்னிலை

12:47 PM

Erode East Bypoll Results: ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வேகமாக வெளியேறினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு.

12:40 PM

Erode East Bypoll Results: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றது .ஜனநாயகம் தோற்றது - அதிமுக வேட்பாளர் தென்னரசு பேட்டி 

12:34 PM

Erode East Bypoll Results: ஈரோடு தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் முதல்வருக்கு பொன்னாடைபோற்றி வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள் துரைமுருகன் , பொன்முடி, நேரு, டி.ஆர்.பாலுfallbacks

12:32 PM

Erode East Bypoll Results: 6 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு

*6வது சுற்று முடிவிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னி

*6வது சுற்று முடிவி

 காங்கிரஸ் வேட்பாளர் - 46179, அதிமுக வேட்பாளர் - 16777 வாக்குகள் பெற்றுள்ளன.

12:06 PM

Erode East Bypoll Results: 5 சுற்று முடிவு

திமுக கூட்டணி - 39855
அதிமுக - 13515
நாதக - 2722
தேமுதிக - 220
பிற - 261

11:38 AM

Erode East Bypoll Results: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளதை திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

11:31 AM

Erode East Bypoll Results: ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் முன்னிலை பெற்று வருவதால் அறிவாலயத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். காங்கிரஸ் அலுவலகத்தில் பட்டாசு வெடித்து மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வரும் காங்கிரஸ் தொண்டர்கள்.

11:04 AM

Erode East Bypoll Results: திமுக தலைமையிலான கூட்டணி 50,000 வாக்குகளுக்கு குறையாமல் வெற்றி பெறும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இது எங்கள் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்

10:50 AM

Erode East Bypoll Results: பத்திரிக்கையாளர்கள் போராட்டம் காரணமாக இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

10:34 AM

Erode East Bypoll Results: "தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு உட்பட்டு தான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது" - மாவட்ட ஆட்சியர் விளக்கம்

10:34 AM

Erode East Bypoll Results: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங். முன்னிலை திமுக, காங். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

3வது சுற்று வாக்கு எண்ணிக்கை சற்று தாமதம்; 2 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே 3வது சுற்று எண்ணும் பணி தொடங்கும்; வாக்கு எண்ணிக்கையில் தாமதம் என மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி பேட்டி.

10:11 AM

Erode East Bypoll Results: ஈரோடு இடைத்தேர்தல் இரண்டாம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

 

10:01 AM

Erode East Bypoll Results: திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் 21,352 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் தென்னரசு 8,112 வாக்குகள் பெற்றுள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 1,598 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 159 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

09:44 AM

Erode East Bypoll Results: வாக்கு எண்ணும் மையத்தில் 48க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, போதிய அளவில் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

09:43 AM

Erode East Bypoll Results: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - 2 சுற்றுகளில் காங்கிரஸ் முன்னிலை

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 19,223 வாக்குகள் பெற்று முன்னிலை; அதிமுக வேட்பாளர் தென்னரசு 6,497 வாக்குகள் பெற்று பின்னடைவு

09:37 AM

Erode East Bypoll Results: ஈரோடு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், ஆளும் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும், அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி.யுமான கே.எஸ்.தென்னரசுக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் எஸ் ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

 

09:22 AM

Erode East Bypoll Results: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை பெற்றதை அடுத்து திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

09:15 AM

Erode East Bypoll Results: முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

 

09:11 AM

Erode East Bypoll Results: முதல் சுற்று: ஈவிகேஎஸ் இளங்கோவன் 1033 வாக்குகள் ; கே.எஸ்.தென்னரசு: 291; மற்றவர்கள் பூஜ்ஜியமும்.

 

08:34 AM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை 398 தபால் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

08:19 AM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குகள் எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை!

08:14 AM

ஈரோடு கிழக்கு தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.

தபால் வாக்குகளில் திமுக கூட்டணி முன்னிலை.

07:58 AM

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பாதுகாப்பிற்காக 500க்கும் மேற்பட்ட  காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட இருக்கிற நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கிறது.

07:41 AM

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையம் முழுவதுமாக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் மட்டும் 600 காவல் துறை மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

07:12 AM

வாக்கு எண்ணிக்கைக்காக 16 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.  இரண்டு தளங்களில் இந்த 16 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தரை தளத்தில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் ஆறு மேஜைகளும்,  அமைக்கப்பட்டிருக்கிறது.  இந்த வாக்கு எண்ணிக்கை என்பது 15 சுற்றுகளாக நடைபெற இருக்கிறது.

07:08 AM

காலை 8 மணி முதல் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது அதன் பிறகு 238 வாக்கு சாவடிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களுடைய வாக்கு வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.  

06:31 AM

Erode East Bypoll Result 2023 : ஈரோடு கிழக்கு தொகுயில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இருந்த நிலையில், அதில் 74.79 சதவீதமாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்துள்ளனர். அதில், வாக்களித்ததில் 82 ஆயிரத்து 138 பேர் ஆண்கள் என்றும், 88 ஆயிரத்து 37 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Read More