Home> Tamil Nadu
Advertisement

புரெவி புயல் Live: அதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் இவையே- வானிலை மையம்!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும். இதனால்  தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

புரெவி புயல் Live: அதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் இவையே- வானிலை மையம்!

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 420 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. பாம்பனிலிருந்து 420 கி.மீ., குமரியிலிருந்து 600 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.

புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ளது. அவை:

ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, சிவகங்கை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது உள்ளது.


12:48 PM 12/2/2020

கடற்கரை மாவட்டமான தூத்துக்குடியில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் (NDRF) இரண்டு அணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு NDRF குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

fallbacks


12:47 PM 12/2/2020

தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு புரெவி புயலுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. நிவர் புயலின் போதும், NDRF குழுக்களால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன என்பதை தமிழகம் கண்கூடாகக் கண்டது.

fallbacks


12:46 PM 12/2/2020

செவ்வாய்க்கிழமை மாலை புரெவி சூறாவளி புயலின் காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதாக IMD-யின் சூறாவளி எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.


11:53 AM 12/2/2020

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


10:51 AM 12/2/2020

நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் மற்றும் கோவிட் நெறிமுறையின்படி நிவாரண முகாம்கள் அமைக்கப்படும்.


10:51 AM 12/2/2020

புரெவி புயல் இரண்டு நிலச்சரிவுகளை ஏற்படுத்தும், முதலில் இலங்கை மீது டிசம்பர் 2 மாலை மற்றும் இரண்டாவது தூத்துக்குடி (தமிழ்நாடு) அருகே டிசம்பர் 4 அதிகாலை ஏற்படும்.


வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..!

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் (Burevi Cyclone) பாம்பனுக்கு 530  கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. திரிகோணமலைக்கு 300 கி.மீ., கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) கணித்துள்ளது. மேலும், புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பனில் 7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது.. இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி புரெவி புயல் பாம்பனுக்கு தென்கிழக்கே 530 Km தொலைவிலும், கன்னியாகுமரிக்கு (Kanyakumari) கிழக்கே 700 Km தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இப்புயல் 6 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவில் இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கிறது.

ALSO READ | புயலாக வலுப்பெறும் 'புரெவி'... தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

இதனால், இலங்கையின் கிழக்குப் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துவருகிறது. மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. திரிகோணமலை அருகே கரையைக் கடந்த பின் புரெவி புயல் அதே வேகத்துடன் மேற்கே நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை அடைகிறது.

தொடர்ந்து நாளை மறுநாள் (டிசம்பர்-4) அதிகாலை குமரி - பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புரெவி புயல் கரையைக் கடக்கும். மணிக்கு 12 Km வேகத்தில் நகர்ந்து வரும் புயல் பாம்பன் - குமரி இடையே கரையைக் கடக்கும்போது மணிக்கு 95 Km வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்" என குறிப்பிட்டுள்ளனர். மேலும், தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 2,3 தேதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ALSO READ | தமிழகத்தை நோக்கி நகரும் மற்றொரு புயல்... டிச.,2 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை!!

அதேபோல் தெற்கு கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களில் வரும் டிசம்பர் 3-லில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வரும் 4 ஆம் தேதி வரையிலுமே மழை வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புரெவி புயல் காரணமாக ராமேசுவரத்தில் பாம்பன் துறைமுகத்தில் 7 ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More