Home> Tamil Nadu
Advertisement

27 முதல் 30 வரை மதுக்கடைகள் செயல்படாது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அனைத்து விதமான மதுகடைகளும் செயல்படாது.

27 முதல் 30 வரை மதுக்கடைகள் செயல்படாது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை: நாடு முழுவதும் 27 ஆம் தேதி தீபாவளி பண்டிக்கை கொண்டாடப்பட உள்ளது. இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி தொடர்ந்து ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். அதேவேளையில் மதுரையில் மருது பாண்டியர் நினைவு நாள், முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை போன்ற விழாக்கள் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவையொட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதாவது 27 ஆ ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிவகங்கையில் மருது பாண்டியர் நினைவு நாளும், அதற்கு அடுத்த வாரம் 30 ஆம் தேதி (புதன்கிழமை) ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளதால், மதுரை மாவட்டத்தில் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அனைத்து விதமான மதுகடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த நான்கு நாட்களில் எந்தவிதமான மது விற்பனை கூடாது என்றும், அதையும் மீறி விற்ப்பவர்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டத்தை தொடர்ந்து, அதன் அண்டை மாவட்டமான சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்திலும் மதுக்கடைகள் அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

Read More