Home> Tamil Nadu
Advertisement

23 தமிழக மீனவர்களை விடுவிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு L முருகன் கோரிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 23 மீனவர்களை விரைவில் விடுவிக்க வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் ஆவண செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்தார்

23 தமிழக மீனவர்களை விடுவிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு  L முருகன் கோரிக்கை

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ள 23 மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் 23 மீனவர்களைக் கைது செய்ததாக, நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 66 மீனவர்கள் பாஜக அமைச்சர் எல். முருகனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமையன்று  மத்திய அமைச்சரின் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மத்திய மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 23 மீனவர்களை பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் விடுவிப்பதற்கு வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

66 மீனவர்கள் எழுதிய கோரிகையை பெற மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், வெளியுறவுத்துறை அயமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், இலங்கை கடற்படையினரால் 23 மீனவர்களைக் கைது செய்ததாகக் கூறி, நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 66 மீனவர்கள் அனுப்பிய கடிதத்தை மேற்கோளிட்டு காட்டிய அமைச்சர் முருகன், மீனவர்களை துரிதமாக விடுவிக்க வெளியுறவு அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ALSO READ |  தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More