Home> Tamil Nadu
Advertisement

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் இணை அமைச்சராக எல். முருகன் நியமனம்

மீன், கால்நடைத்துறை, தகவல் ஒலிபரப்புத் துறைகளின் இணை அமைச்சராக எல்.முருகனை (L Murugan) நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் இணை அமைச்சராக எல். முருகன் நியமனம்

புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் விரிவாக்கம் இன்று மாலை நடந்தது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக பாஜக தலைவர் எல். முருகனுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து புதிய மத்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழா, குடியரசு தலைவர் மாளிகையில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. புதிய மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதில் மத்திய அமைச்சராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார். 

ALSO READ |  மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்களின் பட்டியல் வெளியானது

இதனையடுத்து அவருக்கான துறையும் மத்திய அரசு இன்று ஒதுக்கியுள்ளது. அதாவது மீன், கால்நடைத்துறை, தகவல் ஒலிபரப்புத் துறைகளின் இணை அமைச்சராக எல்.முருகனை (L Murugan) நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

fallbacks

முன்னதாக , அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய தொழிலாளர்  நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவர், குழந்தைகள் மற்றும் பெண்கள் அமைச்சர் தபாஸ்ரீ சவுத்ரி, ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, இணை அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப் ஆகிய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இன்று மாலை இறுதியாக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற 43 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ |  மத்திய அமைச்சராகும் எல்.முருகன்; அடுத்த பாஜக தலைவர் யார்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More