Home> Tamil Nadu
Advertisement

மே 5-ஆம் தேதி கோயம்பேடு சந்தை இயங்காது!

சென்னை கோயம்பேடு சந்தை வரும் மே 5ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.   

மே 5-ஆம் தேதி கோயம்பேடு சந்தை இயங்காது!

வியாபாரிகள் தங்களது உரிமைகள், பிரச்சனைகள், வரிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி பேசவும், விவாதிக்கவும் ஆண்டு தோறும் மாநாடு நடத்துவர். அதில் தங்களது கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி தமிழக அரசுக்கு கோரிக்கையாக முன்வைப்பர். அதன்படி, இந்தாண்டு திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | காய்கறி லாரிகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: கோயம்பேடு வியாபாரிகள்

இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள் மே 5ம் தேதி திருச்சிக்கு பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் அன்றைய தினம் கோயம்பேடு வணிகர்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக மே 5 ஆம் தேதி கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாக காய், கனி, மலர், உணவு தானியம் உள்ளிட்ட  அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளும் இதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். 

இதுதொடர்பாக, சென்னை சேப்பாக்கத்தில் கோயம்பேடு வணிக வளாக காய் கனி மலர் உணவு தானிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகரன் மற்றும் பொதுச் செயலாளர் சீனிவாசன், திருச்சியில் நடைபெறும் வணிகர் தின மாநாட்டில் முதல் முறையாக தமிழக முதலமைச்சர் கலந்துகொள்வதாகவும், அதற்கு ஏதுவாக கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும், திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டில்,  கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக தமிழக முதலமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்க உள்ளதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

மேலும் படிக்க | திருமழிசை இன்னொரு கோயம்பேடாக மாறிவிடக்கூடாது -இராமதாசு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More