Home> Tamil Nadu
Advertisement

கோடநாடு வழக்கு - 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை!

கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கோடநாடு வழக்கு -  5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை!

கடந்த 2017ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு (kodanadu) எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். 

ALSO READ | இனி இந்த துறைகளுக்கும் TNPSC தேர்வு - நிதியமைச்சர் அறிவிப்பு

இதனிடையே கோடநாடு வழக்கில் நீலகிரி காவல் துறையினர் 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 150 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர்.  இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதேபோல கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

fallbacks

இந்நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 5 பேரிடம் ஒரே நேரத்தில் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் நீலகிரி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கில்  கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள திபூ, சதீசன்,ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு வழக்கில் ஒரு கட்சியினர் நேரம் பேசியதாக தீவு கூறியிருந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ALSO READ | தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு எவையெல்லாம் இருக்கும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More