Home> Tamil Nadu
Advertisement

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் பெறுவது எப்படி?

ஜனவரி 16 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க முடியாதவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் பெறுவது எப்படி?

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி தமிழக அரசு மாநிலத்தில் இருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்தது. அதன்படி, கரும்பு, சர்க்கரை, பச்சரிசி அடங்கிய தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்யப்பட்டது. அதனுடன் ஆயிரம் ரூபாயும் பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | களைகட்டியது போகி கொண்டாட்டங்கள்! கொரோனாவுக்கு பிறகு கோலாகல பொங்கல்

பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அனைத்து ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. அந்தந்த பகுதிகளில் இருக்கும் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்ட டோக்கன்களை பெற்றுக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனை காண்பித்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொண்டனர். மாநிலம் முழுவதும் 93 விழுக்காடுக்கும் மேலாக பொங்கல் டோக்கன் கொடுக்கப்பட்டு, பரிசு தொகுப்பும் விநியோகம் செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் சிலரால் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

டோக்கன் பெற்றும் பரிசு தொகுப்பு பெறாதவர்களும் உள்ளனர். இது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதற்கேற்ப ஜனவரி 15 மற்றும் 16 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் அப்போது பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜனவரி 16 ஆம் தேதி பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தேதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிக் கொள்ளலாம் என இருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அப்டேட்டை அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

மேலும் படிக்க | Flowers Price: பொங்கலால் கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை    

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More