Home> Tamil Nadu
Advertisement

முருகன் கோவிலுக்கு வந்த பெண்ணை மர்மக் கும்பல் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பழனி கோவிலுக்குச் சென்றிருக்கிறார் அப்போது அங்கிருந்த மூன்று நபர்கள் அப்பெண்ணை கடத்தி வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முருகன் கோவிலுக்கு வந்த பெண்ணை மர்மக் கும்பல் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை

தமிழ்நாட்டின் புனிதத் தலங்களில் ஒன்றான பழனி முருகன் கோயிலுக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை. கணவனை அடித்து துரத்தி விட்டு, பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. 

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பழனி கோவிலுக்குச் சென்றிருக்கிறார் அப்போது அங்கிருந்த மூன்று நபர்கள் அப்பெண்ணை கடத்தி வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

பாலியல் வன்கொடுமை:
அவருக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள், அந்தப் பெண்ணிடம் உடலுக்கு என்ன பிரச்சினை என்று விசாரித்த பொழுது அதற்கு அந்தப் பெண் மூன்று நபர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து  துன்புறுத்தியதாக கூறியுள்ளார். உடனே அங்கிருந்த மருத்துவர்கள் கண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அங்கு விரைந்து வந்த போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ASLO READ |  நாமக்கல்லில் நடுங்க வைக்கும் சம்பவம்: சிறுமி பாலியல் வன்கொடுமை, 12 பேர் கைது

அந்தப் பெண் போலிசாரிடம் அளித்த வாக்குமூலம்:
கடந்த 19 ஆம் தேதி நானும் எனது கணவரும் பழனி முருகன் கோவிலுக்கு சென்று இருந்தோம். அப்போது அங்கிருந்த 3 மர்ம நபர்கள் தன்னை கடத்திச் சென்று அருகில் இருந்த தங்கும் விடுதியில் அடைத்து வைத்தனர். என்னை காணவில்லை என்று தேடி வந்த என்னுடைய கணவரையும் அந்த மர்ம கும்பல் அடித்து விரட்டி விட்டு இரவு முழுவதும் தங்கும் விடுதியில் வைத்து தொடர்ச்சியாக என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக புகார் கொடுக்க பழனி அடிவாரம் காவல் நிலையத்திற்கு சென்றபோது அங்குள்ள போலீசார் என்னுடைய புகாரினை வாங்க மறுத்தனர். மேலும் அங்கிருந்த காவல் துறை அதிகாரிகள் எங்களுக்கு நேர்ந்த கொடுமையை பற்றி கண்டுக்கொள்ளவே இல்லை. மிகவும் அலட்சியப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கூறினார். 

போலீசார் விசாரணை:
இப்பிரச்சினை தொடர்பாக கேரள கண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர். பழனி அடிவாரத்தில் இச்சம்பவம் நடைபெற்ற தங்கும் விடுதியில் அமைந்துள்ள சிசிடிவி கேமராவினையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதவிர அந்த விடுதி உரிமையாளர் மற்றும் அங்கு பணிபுரியும் பணியாளர்களையும் போலீசார் விசாரித்து வருவகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தமிழக டிஜிபிக்கு கேரள டிஜிபி கடிதம் எழுதியுள்ளார். 

ASLO READ |  Sex Crimes: 1,075 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற மதத்தலைவர் யார் தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More