Home> Tamil Nadu
Advertisement

புஷ்பா பாடலை பாடி மன்னிப்பு கேட்ட கரூர் ஆட்சியர்- வைரலாகும் வீடியோ

புஷ்பா படத்தில் இடம்பெற்றிருக்கும் பார்வை கற்பூர தீபமா பாடலை கரூர் மாவட்ட ஆட்சியர் பாடிய வீடியோ அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

புஷ்பா பாடலை பாடி மன்னிப்பு கேட்ட கரூர் ஆட்சியர்- வைரலாகும் வீடியோ

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான படம் புஷ்பா. 5 மொழிகளில் வெளியான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஊ சொல்றியா மாமா’, ‘பார்வை கற்பூர தீபமா’ போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. தெலுங்கில் பங்கார மாயனே ஸ்ரீவள்ளி என்ற பாடல் தமிழில் பார்வை கற்பூர தீபமா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இரண்டு மொழிகளிலும் சித் ஸ்ரீராம் பாடிய இந்தப் பாடல் பலரது ஃபேவரைட்.

fallbacks

பாடலின் இசை, சித்தின் குரலுக்கு மட்டுமின்றி பாடலுக்கு அல்லு அர்ஜுன் ஆடிய நடனமும் வைரலானது.  இந்தப் பாடலின் நடனத்தை உள்ளூர் பிரபலங்கள் முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர்வரை ஆடி வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க | சட்டம் ஒழுங்கு சீரழிவைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறை அவசியம்: சீமான்

இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் புஷ்பா பாடலை கிடாரை இசைத்து பாடியிருக்கிறார். மேலும் அந்த வீடியோவுக்கான கேப்ஷனில்,

 

“கடைசியில் நானும் புஷ்பா பாடலை பாடியிருக்கிறேன். சித் ஸ்ரீராமின் இன்னொரு மைல் கல். 

fallbacks

நான் தெலுங்கு மொழி பேசுவதில்லை. அதனால் தெலுங்கு பாடகர்களிடமும், தெலுங்கு பேசுபவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவை அதிகம் பேர் பகிர்ந்துவருகின்றனர்.

மேலும் படிக்க | தமிழக கல்விக்கொள்கை: புதிதாக அமைக்கப்பட்ட குழு என்ன செய்யும்?- எழுத்தாளர் விழியன் பகிர்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More