Home> Tamil Nadu
Advertisement

பரிசோதனைகாக மருத்துவமனை செல்லும் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவ பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார்! 

பரிசோதனைகாக மருத்துவமனை செல்லும் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவ பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார்! 

திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று ட்ரக்கியாஸ்டமி என்ற உணவுக்குழாய் மாற்றம் செய்வதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தற்போது அவர் பரிசோதனைகாக மருத்துவமனைக்கு புறப்பட்டார். 

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு உணவுக்குழாய் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு இன்று மீண்டும் மாற்றம் செய்வதற்காக மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதையடுத்து, திமுக தொண்டர்கள் யாரும் சந்திக்க வரவேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவருக்கு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும், இது சாதாரண பரிசோதனைதான் என்றும் தெரிவித்துள்ளனர். 

 

Read More