Home> Tamil Nadu
Advertisement

கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு & நிர்வாக குழு கூட்டம்...

கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு & நிர்வாக குழு கூட்டம் தொடக்கம்...

கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு & நிர்வாக குழு கூட்டம்...

கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு & நிர்வாக குழு கூட்டம் தொடக்கம்...

நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், கூட்டணி குறித்து அரசியல் கட்சிகள் விவாதிக்கத் தொடங்கி விட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸுடன் கூட்டணியைக் உறுதி செய்திருக்கும் தி.மு.க ஒரு படி மேலே சென்று பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், ஆளும் அ.தி.மு.க இன்னும் மெளனம் காத்து வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக லோசிக்கப்படுவதாக தெரிகிறது. ஆலோசனைக்குப் பின் யாருடன் கூட்டணி அல்லது தனித்துப் போட்டியா என்பது பற்றி தெரிய வரும் என்கிறார்கள், நெருங்கிய வட்டாரத்தினர். 

இதை தொடர்ந்து, சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு & நிர்வாக குழு கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 18 பேர், நிர்வாக குழு உறுப்பினர்கள் 5பேர் என மொத்தம் 23 பேர் பங்கேற்றுள்ளனர். 

கூட்டத்தில் நாடாளுமன்றம், இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

Read More