Home> Social
Advertisement

கேரள முதல்வருடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு நடத்தினார்!

கேரள முதல்வருடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு நடத்தினார்!

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக கேரளாவின் கொச்சிக்கு சென்ற கமல்ஹாசன், அங்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களை சந்தித்து பேசினார். 

இச்சந்திப்பின் போது அவர் அரசியல் பற்றியும், காவிரி பிரச்சினை குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. மேலும் தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதுவதற்காக கேரளா சென்ற மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்ததாகவும் தெரிகிறது.

முன்னதாக நேற்றைய தினம் காவிரிக்காக விவசாய சங்கங்களுடன் இணைந்து அனைத்து கட்சி கூட்டத்தினை கமல்ஹாசன் அவர்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தினில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், நடிகர் டி. ராஜேந்திர் ஆகியோர் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Read More