Home> Tamil Nadu
Advertisement

நீங்கள் அழித்தால் நாங்கள் காய்ச்சுவோம்...! போலீசார் உடன் மல்லுக்கட்டும் சாராய வியாபாரிகள்!

கள்ளக்குறிச்சி நேற்று முன்தினம் மெத்தனால் கலந்த விச சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த சம்பவம் தமிழக மட்டுமல்லாது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

நீங்கள் அழித்தால் நாங்கள் காய்ச்சுவோம்...! போலீசார் உடன் மல்லுக்கட்டும் சாராய வியாபாரிகள்!

வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சட்டம் ஒழுங்கு போலீசார் நாள்தோறும் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராய வேட்டை மேற்கொண்டு தினந்தோறும் சாராய ஊரல்கள், கள்ளச்சாராயம் ஆகியவற்றை அல்ல அல்ல குறையாத அட்சய பாத்திரம் என்ற முதுமொழிக்கு ஏற்ப நாள்தோறும் கண்டுபிடித்து அழித்து வந்தனர். மேலும் நாள்தோறும் கள்ளச்சாராய வியாபாரிகள் மலைப்பகுதிகள் ஆங்காங்கே மற்றும் மலை இடுக்குகளில் கள்ளச்சாராய ஊரல்கள் மற்றும் கள்ளச்சாராயத்தை காய்ச்சி வந்து போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தனர். நீங்களும் கண்டுபிடித்து அழியுங்கள் நாங்களும் மீண்டும் மீண்டும் காய்சுகிறோம் என போலீசாருக்கு சவால் விடும் வகையில் இந்த நிகழ்வானது நாள்தோறும் நடந்து கொண்டே இருந்தது.

மேலும் படிக்க | நரேந்திர மோடி ஆட்சியில் சாராயம் குடித்து நூறு பேர் செத்துப்போனார்களே, பதவி விலகினாரா? - ஈவிகேஎஸ் கேள்வி

இதனை அடுத்து கள்ளக்குறிச்சி மரண ஓலத்தில் சம்பவத்தின் எதிரொலியாக வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் நேரடியாக சாராய வேட்டை களத்தில் இறங்கினார். கடந்த இரண்டு நாட்களாக வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு மலைப்பகுதிகளான அல்லேரிமலை, ஜார்தான்ன கொள்ளை, நெல்லிமரத்து கொள்ளை, கூனம்பட்டி, அதேபோல் பேரணாம்பட்டு மலைப்பகுதிகளான சாத்கர்மலைபகுதி, டோபிகானா பாறை, பால்சுணை, அல்லிசுணை, சவுக்கு பள்ளம், டங்கா, கடம்பகானாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ட்ரோன் கேமரா உதவியுடன் சாராய வேட்டையில் இறங்கினர் போலீசார். அப்பொழுது மலை இடுக்குகள் மற்றும் வனப்பகுதி புதர் பகுதிகள் உள்ளிட்ட ஆங்காங்கே கள்ளச்சாராய ஊரலுக்காக போடப்பட்டிருந்த 9100 லிட்டர் கள்ளச்சாராய  ஊறல், 1610 லிட்டர் கள்ளச்சாராயம், 565 மது பாட்டில்கள் 104 கள்ளச்சாராய வழக்குகள் பதியப்பட்டு 60 சாராய வியாபாரிகள் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற சாராய வேட்டையில் அதிரடியாக கைதுதனர்.

மேலும் கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டு நேற்று வரை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்சுவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 3,91,575 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், சுமார் 66,092 லிட்டர் கள்ளச்சாராயம், 43,729 மது பாட்டில்கள், கள்ளச்சாராய ஊரலுக்கு பயன்படுத்தும் வெல்லம் 12,100 கிலோ, வெள்ளை சர்க்கரை 915 கிலோ, பட்டை சுமார் 1,200 கிலோ மற்றும் கள் 128 லிட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளன. கடத்தலுக்கு பயன்படுத்திய 170 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கள்ளச்சாராய வழக்குகள் 5,760 பதிவு செய்து 52 பேர் மீது குண்டார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. 

கள்ளக்குறிச்சியை போல உயிர் பலி வாங்கும் இது போன்று கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை இரும்பு கரம் கொண்டு வேலூர் மாவட்ட போலீசார் தொடர்ந்து சாராய வேட்டை நடத்தி அடியோடு ஒழித்து கட்ட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. வேலூர் எஸ்பி மணிவண்ணன் மேற்கொண்டுள்ள முயற்சியில் வெற்றி பெறுவார்களா போலீசார் சாராய வியாபாரிகள் சிறைக்குச் செல்வார்களா என அடுத்தடுத்து நடக்கும் சோதனைக்கு பின்னரே நமக்கு தெரிய வரும் பொறுத்திருந்து பார்ப்போம் மக்களோடு நாமும்.

மேலும் படிக்க | கள்ளச் சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம்: நடிகர் சூர்யா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More