Home> Tamil Nadu
Advertisement

சிபிஎம் கட்சி பிரமுகர் கொலை வழக்கு- 5 பேருக்கு ஆயுள் தண்டனை

நாமக்கல் அருகே,  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு ஆதரவாக புகார் கொடுக்கச் சென்ற கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிபிஎம் கட்சி பிரமுகர் கொலை வழக்கு- 5 பேருக்கு ஆயுள் தண்டனை

நாமக்கல் அருகே,  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு ஆதரவாக புகார் கொடுக்கச் சென்ற கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிவகுமார் எனும் நபரிடம் 10 ஆயிரம் ரூபாய் வட்டிக்குக் கடனாகப் பெற்றுள்ளார். அந்தக் கடனுக்கான வட்டியை அவர் இளம் வயது மகள் வாயிலாகச் செலுத்திவந்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சிவக்குமார், அந்த இளம் பெண்ணை மிரட்டித் தனது நண்பருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனை வீடியோ எடுத்து, இணையதளத்திலும் பதிவேற்றியதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சி.பி.எம் கட்சியின் பள்ளிபாளையம் கிளைச் செயலாளர் வேலுச்சாமி, பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தாருடன் சென்று  பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 2010ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது. பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டுத் தனது இருசக்கர வாகனத்தில் அவர் வீடு திரும்பியபோது மஜித் தெருவில் வைத்து கும்பல் ஒன்று வேலுச்சாமியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் சிவகுமார், கணேசன், அன்பு, அருண், ராஜேந்திரன், ஆமையன், பூபதி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கு 17.03.2010ஆம் தேதி சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது. 

மேலும் படிக்க | சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; 3 பேர் மீது காவல்துறை வழக்குபதிவு!

கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைக்கு பிறகு இதில்  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த வழக்கில் சிவகுமார், கணேசன், அருண்,  அன்பு மற்றும் ராஜேந்திரன் ஆகிய 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய ஆமையன் எனும் நபர்  கொலை செய்யப்பட்ட நிலையில், ஜாமீனில் வெளிவந்த பூபதி எனும் நபர்  கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தலைமறைவாக உள்ளார். தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரும் கோவை சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் படிக்க | மது குடிப்பதை கண்டித்த மனைவி; மனம் உடைந்த கணவர் தற்கொலை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More