Home> Tamil Nadu
Advertisement

6 கி.மீ தூரத்தில் வசித்தாலும் கட்டாய இலவச கல்வித் திட்டத்தில் சேருங்கள் -நீதிபதி உத்தரவு

 RTE System For Private Schools : தனியார் பள்ளிகளில் கட்டாய இலவசக் கல்வித் திட்டத்தில் மாணவர்கள் முறையாக சேர்க்கப்படுகிறார்களா ?. இந்த விவகாரத்தில் நீதிபதி தலையிட்டு சொல்லும் விளக்கங்கள் என்னென்ன ?  

6 கி.மீ தூரத்தில் வசித்தாலும் கட்டாய இலவச கல்வித் திட்டத்தில் சேருங்கள் -நீதிபதி உத்தரவு

தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு கல்வி கட்டாயம் வழங்க வேண்டும். ஆனால், முறைப்படி இந்த இட ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் வழங்குகிறதா ?

இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த கோபால் மற்றும் சரவணன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "தங்களது குழந்தைகளுக்கு மதுரை மகாத்மா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டத்தின் RTE  அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர். 

மேலும் படிக்க | "SC கையில ஸ்கூல் போக போகுது" பள்ளியில் ஜாதி வெறியை வளர்க்கும் டீச்சர்!

இந்த மனு நீதிபதி ஜி‌.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதி, “All animals are equal but some animals are more equal than others” - George Orwell in “Animal Farm” என்ற வாசகத்துடன் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.  இந்த வழக்கில் நீதிபதி பேசியதாவது, 

‘மனுதாரர்கள் இருவரும் தங்களது குழந்தைகளுக்கு மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி திட்டத்தில் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். ஆனால் மனுதாரர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளே வசிக்கவில்லை என்ற காரணத்தை கூறி பள்ளி நிர்வாகம் மனுவை  நிராகரித்துள்ளது. மகாத்மா மெட்ரிக் பள்ளி  சிறுபான்மையினர் பள்ளியும் கிடையாது. எனவே இவர்கள் இந்த சட்டத்திலிருந்து தப்பிக்கவும் முடியாது.

மத்திய அரசின் கட்டாய கல்வி திட்டத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. அதில், ஒரு பள்ளியில் கட்டாய கல்வி திட்டத்தின் அடிப்படையில் பள்ளி ஒரு கிலோமீட்டருக்குள் போதிய விண்ணப்பம் வரவில்லை என்றால் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். 

fallbacks

ஒருவேளை, மூன்று கிலோ மீட்டருக்குள்ளும் போதிய மாணவர்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

எனவே நீதிமன்றம் வகுத்துள்ள இந்த விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பின்தங்கிய குழந்தைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். இதனைக் கருத்தில் கொண்டு மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும்’ 

என்று உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

மேலும் படிக்க | தூத்துக்குடி: கைவிட்ட அரசு... பதநீர் விற்ற பணத்தில் பள்ளி நடத்தும் கிராம மக்கள்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More