Home> Tamil Nadu
Advertisement

ஜெயலலிதாவின் நகைகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? தமிழக அரசிடம் ஒப்படைக்க வாய்ப்பு

Jayalalithaa's jewels worth: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தமிழகத்திற்குத் திரும்பும் வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் நகைகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? தமிழக அரசிடம் ஒப்படைக்க வாய்ப்பு

பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருப்பதாக தெரியவந்துள்ளது. 14 ஆயிரம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதில், 468 நகைகள் மட்டும் தங்கம், வைரம், மரகதம், முத்து, ரத்தினம் உள்ளிட்ட கற்களால் ஆனவை. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 51 லட்சத்து 59 ஆயிரத்து 144 ஆகும்.

மேலும் படிக்க - ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

மேலும், 11,344 புடவைகள், 750 காலணிகள், 250 சால்வைகள், 44 ஏசி இயந்திரங்கள், 33 தொலைபேசிகள், 131 சூட்கேஸ்கள், 91 வாட்ச்கள், 27 வால் கிளாக், 86 ஃபேன்கள், 146 அலங்கார நாற்காலிகள், 34 டீப்பாய்கள், 31 டேபிள்கள், 24 கட்டில்கள், 31 டிரெஸ்ஸிங் டேபிள்கள், 81 அலங்கார விளக்குகள், 20 சோஃபாக்கள், 215 அழகிய வேலைபாடு கொண்ட கண்ணாடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பும் கோடிக்கணக்கில் இருக்கலாம் என தெரிகிறது.

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட வேண்டும் என சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி வழக்கு தொடர்ந்தார். ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு வாரிசுதாரர்கள் உரிமை கோர முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், நகைகளை ஏலமிடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம் என பெங்களூர் நீதிமன்றம் தெரிவித்தது. இதற்காக தமிழ்நாடு அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து அவர் மூலமாக போலீஸாருடன் இணைந்து நகைகளை பெற்றுக் கொள்ள உத்தரவிடப்பட்டது.

மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணையை நடத்தியதற்காக ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து 5 கோடிக்கான வரைவோலையை கர்நாடக அரசுக்கு செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, ஜெயலலிதாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் விரைவில் தமிழகத்திற்கு வரலாம் என தெரிகிறது. அது போல் அந்த பொருட்களின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கலாம் என தெரிகிறது. 1991 முதல் 2016 வரை தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவியேற்றவர் ஜெயலலிதா. அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், 2011 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் அவர் தண்டனை பெற்றார். இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் நகைகளும் அடங்கும். இந்த உத்தரவுகள் அமலுக்கு வந்தால், ஜெயலலிதாவின் நகைகள் விரைவில் தமிழகத்திற்குத் திரும்பும் வாய்ப்பு உள்ளது. இந்த நகைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் படிக்க - எடப்பாடி பழனிசாமி போடும் அரசியல் கணக்கு..! பாஜக கப்சிப் - அதிமுகவுக்கு கைகொடுக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More